பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டாரப் பொறுப்பாளர், 'புலவரே தாங்கள் நினைந்து நடுங்கும் அந்நிலை, எம் கோமகற்கு நேர்ந்துவிடாது; அவன் பேராற்றல், அத்துணை விரைவில் அழிந்து போகும் இழிவுடைய தன்று, இஃது உண்மை; இதைத், தாங்கள் உணரவேண்டு. மாயின், இப்பருவத்திலும் அவன்மேற்கொள்ளும் போர்க் களத்தைச் சென்றுபாருங்கள்; இப்போதும் அவன் போர்க் களத்தில்தான்் உள்ளான்; அக்களமும் அண்மையில்தான்் உளது; இப்போது புறப்பட்டால், போர் ஒயும் தருவாயில் ஆங்கு அடைந்து விடலாம்; வேண்டுமாயின் சென்று, அவன் ஆண்மைச் சிறப்பை, ஆற்றற் பெருமை நேரில் கண்டு, உம்கலக்கத்தைக் கைவிடுவீவராக’’ என்று கூறினர்.

பொறுப்பாளர் கூறியனகேட்ட புலவர், உடனே போர்க்களம் நோக்கிப் புறப்பட்டு விட்டார்; களக்காட்சியைப் போர் முடிவில் காண்பதினும், அப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது காண்பதே பொருந்தும், என்ற உணர்வு பிறக்கவே, புலவர் விரைந்து நடந்தார்; அதனுல் போர்முடியச் சிறிது நாழிகை இருக்கும் போதே, களத்தை அடைந்துவிட்டார்; களம்புகுந்த புலவர் கண்கள், களங்காய்க்கண்ணியான் யாண்டுளன் என நோக்கின. அவன், தன்படையின் முன்வரிசையில் நின்று, மாற்ருர் படையின் முன்வரிசையில் நிற்கும் வாள்வீரர்களோடு, வாட்போர் புரிந்து கொண்ட டிருந்தான்். களங்காய்க்கண்ணியானின் கைவாள் எது? அவனைச் சூழ்ந்து நின்று போருடற்றும் மாற்ருர் ஏந்தும் வாள்கள் எவை? என்பதை எளிதில் கண்டுகொள்ளாதபடி, அவ்வாள்கள் ஒன்ருேடொன்று கலக்கக் கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது; வாள்வீசும் அவன் தோளாற்றலைக் கண்ணுற்ற புலவர். தாம் அரண்மனைக்கண் கொண்ட ஐயமும் அச்சமும் அற்று, அவன் ஆற்றலை நினைந்து வியந்து கொண்டிருந்தார்; அவ்வியப்புணர்வால் புலவர் தன்னை

50