பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிந்து ஒழுகினன் கற்றும், கற்ருரைத்தலைப்பட்டும் அவன் உள்ளம் பண்பட்டுவிட்டது; அதனல், உள்ளத்தையும், அது உணர்த்தும் வழியில் தொழிற்படும் ஏனைய உணர்வுகளையும் அது.அது விரும்பும் வழிகளில் போகவிடாது, தீ நெறியிற்செல்லாது நன்னெறியில்மட்டுமே செல்லுமாறு போகவிடுவதே உண்மையான அறிவிற்கு அழகாம் என உணர்ந்து அவ்வுயர்ந்த அடக்கநெறியை உரமாகப்பெற்று உயர்ந்தான்். அந்நிலையில், அவன் சாலவும் சிறந்தவனுகவே, அவனைக் காணும் உயர்ந்தோர் ஒவ்வொருவரும், தம்உளமார வாழ்த்தத் தலைப்பட்டனர். :

இவ்வாறு சிறந்தோர் வாழ்த்த செம்மாந்து வாழ்ந்திருந்த சேரலர் கோவாம் களங்காய்க்கண்ணியைேடு, நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றமையால், புலவர் காப்பியாற்றுக் காப்பியனுர்க்கு, அவன்பால் அடங்கிக் கிடக்கும், வேறு இரு பண்புகளும் புலப்பட்டன. புறநாடு புகுந்து பகைவென்று பொருள் ஈட்டிப் புகழ்பெருக்கும் பேரரசர்பால், அதற்குத் துணைபுரியும் பெரும்படை இருந்தால் மட்டும் போதாது; பெரும்படையோடு பு ற த் ேத சென்று பலநாள் தங்கிப் போரிட்டு வருவது, தன்அகநாட்டில் அமைதி நிலவும் அரசியல் வாழ்க்கையைப்பெற்ற அரசர்க்குமட்டுமே ஆகும்; அவ்வரசியல் அமைதி, நாட்டு மக்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உறைய வீடின்றி அலையும் நிலையில் நிலைபெருது; நிலைகுலைந்த வாழ்வினரான அக்குடி மக்கள், அவ்வரசை நிலைகுலையப் பண்ணிவிடுவர்; ஆகவே படையோடு புறம்போக விரும்பும் வேந்தன், முதற்கண் தன்நாட்டில் அமைதியை நிலைநாட்டத் தொடங்கி, தன்குடிமக்களின் தளர்ச்சிகளைத் தவிர்த்து, அவர்களுக்கு நிறைவாழ்வு அளிக்க வேண்டும்; அப்பொழுதுதான்் அவனுக்கு உண்மையான வெற்றி வாய்க்கும். அவ்வரசியல் உண்மையை உணர்ந்து

57