பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாம் என்ருலும், அந்நிலையிலும் அத்தகைய பேராசைக்கு அடிமையாகித் தனக்கென வாழ்ந்து விடாமல், தான்்பெறும் அப்பேரின்பத்தைப், பிறரும் பெறுவாராக எனும் பேருள்ளம் கொண்டு பிறர்க்கே வழங்கிப் பிறர்க்கென வாழும் அப்பெரு நிலை, உரம்மிக்க உடையான் ஒருவனுக்கு மட்டுமே வாய்க்கும்; அவ்வுள்ளுரத்திலும், களங்காய்க் கண்ணியான் குறையுடையானல்லன்; பேரின்பப் பொருள்களையெல்லாம், தன் பொருட்டு ஈட்டாது, பிறர்பொருட்டே ஈட்டிவைத்த பேராண்மையாளன் அவன்.

தனக்கென வாழாது பிறர்கென வாழ்வோர் உண்மையான் இவ்வுலகம் உண்டு என்று கூறுவர் ஆன்ருேர் ஆதலின், அவ்வியல்பினை ஆரப்பெற்றிருந்தமையால், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலாதன், உலகச் செல்வர் அனைவரினும் சாலச்சிறந்து விளங்கின்ை ஆகவே, அவ்வுண்மையுணர்ந்து, அவனை உ ள மார வாழ்த்திப் பாராட்டினர் புலவர் காப்பியர்ை.

பரிசிலர் வி ரும் பு ம் பொருளெலாம் அளிப்பவன் களங்காய்க்கண்ணியான். அவன் அன்பைப் பெற்ற பரிசிலர் அனைத்துப் பொருளையும், பெற்றவராவர்; ஆகவே, அவர் செல்வம் எனப்படுவது, அவனேயல்லது அவன் அளிக்கும் பொன்னும் பொருளும் ஆகா எனும், இவ்வுயரிய பொருள் அளிக்கும் பெ ரு ைம, பரிசிலர் வெறுக்கை என்ற தொடர்க்கே உளதாதல் உணர்ந்து, அத்தொடரால் இப்பாவிற்குப் பெயர் சூட்டினர்கள், அப்பாவின் நலன் துய்த்த பெரியார்கள், - :

28. உலகத்தோரே பலர்மன் செல்வர்;

எல்லாருள்ளும் நின் நல்இசை மிகுமே !

-5- 65