பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டி, தூய வெண் நூலால் கோக்கப்பெற்ற பேரொளிவீசும் முத்துச்சரங்கள் கிடந்து அணிசெய்யும் அம்முடியின், அமைப்பழகைக் கண்டு களிகூர்ந்த புலவர், தன்னை அணிந்து கொண்டவனுக்குத் தன்பெயரால் பெயர்சூட்டவல்ல நலம்மிக்க அந்நார்முடியை நணிமிகப் பாராட்டினர்.

நார்முடியின் வனப்பினைக் க ண் டு நயந்த புலவர், சேரலாதன் அம்முடியைப் புனைதற்குக் காரணமாய் இருந்த அந்நிலையையும், அந்நிலையில் அவன் ஆற்றிய ஆண்மைச் சிறப்பினையும் நினைந்து கொள்ளவே, களங்காய்க்கண்ணியானின், போர்மேற்செல்லும் பேராற்றல் சிறப்பினையும் நினைந்துகொள்ள வேண்டியதாயிற்று.

போர் முறைகளையெல்லாம் முற்றவும் கற்று, ஆற்றல்மிகு மறவளம் நிலைபெற்று விட்டமையால், தம் ஆண்மையை அனைத்துலகத்தவரும் கண்டு பாராட்ட வேண்டும் என்ற வெற்றிப்புகழ் விரும்பும் வேட்கை உடையவராய், அவ் வேட்கை உணர்த்தும் தும்பைமலர் மாலை அணிந்து, களம் புகுந்து கொடிய போர்புரியவல்லவராகிவிட்ட சிலர், அவனைப் பகைத்துக் கொண்டாராக, அது பொருத அவன், அவர் மீது அப்போதே போர் .ெ த ா டு த்து விடுவன்; அவன் குறிப்பு அதுவாம் என்பதை அறிந்துகொண்ட அந்நிலையே, முரசு முழக்கும் முதுகுடிப்பிறந்த முதியோன், போர்முரசைக், கடிப்பினைக் கடிய ஒச்சி அறையத்தொடங்கி விடுவன்; போர் வந்தது எனக் கேட்டதும் பூரிக்கும் தோள் பெற்றவர் அவன் படை வீரர் ஆதலின், அவர்கள் அம்முரசொலியைக் கேட்டதுமே போர்க்களம் நோக்கிப் புறப்பட்டு விடுவர் ஆதலின், படை வீரர்களைப் போர்க்களத்திற்கு விரைந்து போக்குமாறு பணிக்கும் பெருமையுடையதாக எழும் அப்போர் முரசின் ஒலி, இடியோசைபோலும், கடிய ஓசையுடையதாக

69