பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 33

கோளுக்கிசைந்த திருஞானசம்பந்தர் திருத்தோணி புரத்து இறைவர்.பால் விடைபெற்றுத் தாமரைமலர் போலும் மெல்லிய பாதங்கள் தரைமீது பட்டு வருந்தத் திருநனிபள்ளியை நோக்கி நடந்தருளினர். ஆளு டைய பிள்ளையார் அடிமலர் வருந்த நடப்பதும் அவ ரைப் பிறர் எடுத்துச்செல்லுவதும் பொருத பேரன்பின ராகிய சிவபாத விருதயர், பிள்ளேயாரைத் தமது தோளின் மேல் அமர்த்திக்கொண்டு செல்வாராயினர். தந்தையார் தோளின் மேலமர்ந்து செல்லும் திருஞான சம்பந்தர், திருநனிபள்ளியை அணுகிய நிலையில் அந் நகரைச் சுட்டிக்காட்டி எதிரே தோன்றுவதாகிய இப் பதி யாது’ எனத் தந்தையாரை வினவ, அவரும் திருநனிபள்ளியென் ருர், அதனேயுணர்ந்த பிள்ளையார் அத்திருப்பதியைத் தொழுது காரைகள் கூ கைமுல்லே? என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். இத்திருப்பதிக த்தின் பாடல்தோறும் சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் நகர் வள மார்ந்த இத் திருநனிபள்ளிடோலும் என வியந்து போற்றி இதன் திருக்கடைக்காப்பில் 'நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளியை நினைந்து போற்றுவாரது பேரிடர் கெடுதற்கு ஆணே நமது என்னும் உறுதி மொழியும் வைத்தருளிர்ை.

காரைகள் கூகைமுல்லே களவாகையிகை

படர் தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மி விம்மு சுடுகாடமர்ந்த

சிவன் மேய சோலே நகர்தான் தேரைக ளா ரைசாய மிதிகொள்ளவாளே

குதிகொள்ள வள்ளே துவள

நாரைகள் ஆரல்வாரி வயன் மேதி வைகு

நனிபள்ளி போலு நமர் காள்.

என வரும் இத்திருப்பதிகத்தின் முதற் பாசுரத்தின் முதலிரண்டடிகளிற் பாலைநில வியல்பும், பின்னிரண் டடிகளில் நெய்தல் நிலவியல்பும் இவ்வாறே பின்