பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 9 :

வருந்துங் கொலாங்கழல் மண்மிசை யே கிடின் என்றுமென்ருர்த் திருந்தும் புகழ்ச்சண்டை ஞானசம்

பந்தற்குச் சீர்மணிகள் பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்

காண் புணரித் திகழ்நஞ் சருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே.

என வரும் ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி விரித்துக் கூறியுள்ளார்.

திருநெல்வாயில் ரத்துறையிற் சிலநாள் தங்கி யிருந்து இறைவனைப்போற்றிய திருஞானசம்பந்தர், அடியார் புடைசூழச் சிவிகையிலமர்ந்து பழுவூர், விசயமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தனேநல்லூர், ஓமாம்புலியூர். வடதளி, வாழ்கொளிபுத்துார், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர் முதலிய தலங்களைப் பணிந்து திருப் பதிகம் பாடித் தமது பதியாகிய திருப்பிரமபுரத்திற்கு வந்து சேர்ந்தார்.

உபநயனச் சடங்கு

திருஞானசம்பந்தப் பிள்ளேயார் சீகாழிப்பதியில் அமர்ந்திருக்கும் பொழுது அவருக்கு ஏழாவதாண்டு நடந்தது. ஒரு பிறப்பும் எய்தாத படி சிவஞானம் பெற்ற பிள்ளே யார்க்கு வேதியர்கள் தம் குலத்தின் இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்து விக்கும் உபநயனச்சிறப்பினை உலகியல் முறைப்படி செய்தனர். மான்தோலுடன் அமைந்த முப்புரி நூலினே அணிந்து மறைநான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்த மறையோர்களுக்குப் பிள்ளையார் தம்முடைய புனித வாக்கால் எண்ணரிய வேதங்களே இயம்பியருளினர். மறையோர்கள் தாம்தாம்வல்ல மறை களில் தமக்கு உண்டான ஐயங்களேப் பிள்ளேயாரிடம்