பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 95

கண்ணுர் கோயில், புள்ளிருக்குவேளுர் முதலிய தலங் களே வணங்கிக் காவிரியின் வடகரை வழியே மேற் றிசை நோக்கிச் சென்று அவ்வழியேயுள்ள திருப்பதிக ளெல்லாவற்றையும் பாடிப் போற்றி மழநாட்டிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருப்பதியை அணு கினுள்,

அந்நகரில் வாழும் குறுநில மன்னனுகிய கொல்லி மழவன் என்பான், தன் மகள் முயலகன் என்னும் நோயில்ை வருந்துவதைக் கண்டு பலவகை மருத்து வங்கள் செய்தும் அந்நோய் தணியாமையால் இறை வன் திருவடியே உறுதுனே யெனக் கொண்டு தன் மக ளேத் திருப்பாச்சிலாச்சிராமத்து இறைவர் திருமுன்னர் இட்டு வைத்தனன், அவ்வளவில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அங்கு எழுந்தருள்கின் ருர் என்ற செய்தி யைக் கேள்வியுற்று அவ்விடத்தைவிட்டு நீங்கிப் பிள்ளையாரைப் போற்றும் பெருவிருப்புடன் தன் நகர் முழுதும் அலங்கரித்து எதிர்கொண்டு இறைஞ்சின்ை. பிள்ளையார் சிவிகையினின்றும் இறங்கித் திருக் கோயிலே வழிபடச் செல்லும்பொழுது இஸ்ங்கொடி போல்வாளாகிய கன்னியொருத்தி உணர்வற்று நிலத்திற்கிடத்தக்ே கண்டு இஃது என்ன? என வினவினர். அது கேட்ட மழவன், பிள்ளையாரை வனங்கி தின்று இவள் அடியேன் பெற்ற மகள், இவளே முயலகனென்னும் நோய் வருத்துதலால் இறைவன் திருமுன்னர் இட்டுவைத்தேன்’ என்ருன். அருள்கூர்ந்த சிந்தையராகிய ஆளுடைய பிள்ளேயார் பாச்சிலாச்சிராமப் பரமனேப் பணிந்து,

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச் சடை சுற்றிமுடித்துப்

பணிவளர் கொள்கையர் பாரிடஞ்சூழ

ஆரிடமும்பலி தேர்வர்