பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

பன்னிரு திருமுறை வரலாறு


காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமலவூரர்க்கம்பொன் ஆயிரங் கொடுப்பர்போலும் ஆவடுதுறையனுரே.

எனவரும் திரு நேரிசையிற் புகழ்ந்து போற்றியுள்ளார்.

சிந்தையைத்தேனைத் திருவாவடுதுறை யுட்டிகழும் எந்தையைப் பாட விசைத்துத் தொலேயா நிதியமெய்தித் தந்தையைத் தீத்தொழில் மூட்டியகோன்'

எனவும்,

மாயிருஞாலத்து மன்னவடுதுறை புக் காயிரஞ் செம்பொ னதுகொண்டும்’ எனவும்,

  • திருவாவடு துறையிற் செம்பொற்கிழியொன்

றருளாலே பெற்றருளும் ஐயன்

எனவும் நம்பியாண்டார் நம்பி இவ்வற்புதத்தைத் தாம் பாடிய பிரபந்தங்களிற் குறித்துப் போற்றியிருத் தல் இங்கு நோக்கத்தகுவதாகும்.

யாழ்முரி பாடியது

பின்பு திருஞானசம்பந்தர் திருக்கோழம்பம் வைகல் மாடக் கோயில் முதலிய பல தலங்களைப் பணிந்து பாடித் திருத்தருமபுரத்தை யணுகினர். தருமபுரம் திருநீலகண்டப் பெரும்பாணருடைய அன்னயார் பிறந்த ஊராதலின் அங்கு வாழும் அவருடைய சுற்றத்தார் திருஞானசம்பந்தப் பிள்ளே யாரை எதிர்கொண்டு போற்றினர்கள், பெரும்பான ரும் தாம் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளிய திருப் பதிகத்தினை யாழிலிட்டு வாசிக்கும் பேறுபெற்றமை யைத் தம் சுற்றத்தார்க்கு எடுத்துரைத்தார். அதனேக் கேட்ட உறவினர்கள் நீவிர் திருப்பதிகத்தின யாழி லிட்டுத் தக்க முறையில் வாசிப்பதனால் அதன் இசை