பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

பன்னிரு திருமுறை வரலாறு


திய ஆளுடைய பிள்ளேயார் இறைவனேத் தலைவனுகக் கொண்டு அகப்பொருட்டுறைய மையப் பாடிய இத் திருப்பதிகமாகிய மந்திரத்தால் கன்னியின் மாமனுகிய வணிகன் உயிர் பெற்றெழுந்தனன் எனக்கொள்வதே ஏற்புடையதாகும். தமிழுக்கேயுரிய இனிய அகப் பொருட்டுறையமைந்த இத் திருப்பதிகத்தினப்பாடி விடந்தீர்த்தருசிய இவ்வரலாற்றின் நுட்பத்தினே,

'குவளேக் கருங்கட் கொடியிடை துன்பந்தவிர அன்று

துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகை செய்தவன்"

எனவரும் திருச்சண்டை விருத்தம் இனிது புலப்படுத் துவதாகும்.

திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருக்கும் பொழுது சிறுத்தொண்ட நாயனர் அங்கு வந்து திருச் செங்காட்டங்குடிக்கு மீண்டும் எழுந்தருளும்படி பிள்ளை யாரை வேண்டிக்கொண்டார். பிள்ளேயார் மருகற் பெருமானே வணங்கி விடைபெறச் சென் ருர், அப்பொழுது, செங்காட்டங் குடியிற் கணபதிச்சரத்தில் வீற்றிருந்தருளுந் திருக்கோலத்தை மருகற் பெருமான் பிள்ளையார்க்குக் காட்டியருளினர். அது கண்ட பிள் ாேயார்,

அங்கமும் வேதமும் ஒது நாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி'மருகல் நிலாவிய மைந்த

(சொல்லாய் செங்கயலார் புனற் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங்

(குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங்

(காமுறவே.

எனத்தொடங்கும் திருப்பதிகத்தைப்பாடிப் போற்றித் தம்மை அழைக்கவந்த சிறுத்தொண்டருடன் செங் காட்டங்குடி அடைந்து கணபதிச்சரத்திறைவரைப்