பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓

திருநாவுக்கரசு சுவாமிகள் ஆவர். 7-வது திருமுறையை அருளிச் செய்தவர் சுந்தரமூர்த் தி சுவாமிகளாவர். இவ்வேழு திருமுறைகளும் தேவாரம் எனவும் அடங் க ைமுறை எனவும் வழங்கப்பெறும். இவர்கள் மூவரும் மாணிக்கவாசக சுவாமிகளும் சமய குரவர் நால்வர் எனப் போற்றப்பெறுவர். இந்நூலில் தி ரு ஞ | ன சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமி களது வரலாறு முதலில் தரப்படுகிறது. அவர்களது காலம் ஆராயப்படுகிறது.

தேவாரத் திருப்பதிகங்கள் சமய நூல்களாகவும், இலக்கிய நூல்களாகவும், இசை நூல்களாகவும், காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் அவ் வவ்வகை நூல்களில் தலே சிறந்தவைகளாகத் தேவா ரத் திருப்பதிகங்கள் விளங்குகின்றன. இந்நூலில் ஆராய்ச்சிமுறையில் தேவாரத் திருப்பதிகங்களில் நாம் காணும் சமய உண்மைகள் விளக்கப்படுகின்றன ; இலக்கிய நயங்கள் ஆராயப்படுகின்றன; பண் நுணுக் கங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. நன்னெறியில் வாழ்வதற்கும் தமிழில் நிறைந்த இலக்கிய அறிவு பெறு வதற்கும் இசைவல்லுநர் ஆவதற்கும் தூய உள்ளம் பெறுவதற்கும், தேவாரத் திருப்பதிகங்களின் துணையே சாலும் என்பது தெளிவுபடுத்தப்பெறுகிறது.

இலக்கிய நூல் என்ற முறையில் தேவாரத் திருப் பதிகங்களே ஆராய்கின்ற இந்நூலின் பகுதி, யாப் பமைதி செய்யுள் அமைதி, பாவினங்கள் பற்றித் தரும் விளக்கம் மிகவும் அருமையுடையது. இசைநூல்கள் என்ற முறையில் தேவாரத் திருப்பதிகங்களே ஆராய் கின்றபொழுது இசை அமைப்புப் பற்றியும் பண்கள் பற்றியும் இந்நூலில் பல நுண்ணிய கருத்துக்கள் பாராட்டத்தக்க முறையில் தெளிவுபடுத்தப்பட்டிருக் கின்றன.