பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் ! #3

தர் முருக நாயனர் திருமடத்தில் நீலநக்கர், சிறுத் தொண்டர் முதலிய அடியார்களுடன் அளவளாவி யமர்ந்திருந்தனர்.

திருநாவுக்கரசருடன் தலயாத்திரை

ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் இறைவன் வீற். றிருக்கும் திருப்பதிகளே வணங்கவெண்ணித் திருப்புக லுரரினின்றும் புறப்பட்டாாகள். சிறுத்தொண்டரும் திரு நீல நக்கரும் விடைபெற்றுத் தத்தம் ஊருக்குச் சென்ற னர். பிள்ளையாரும் நாவுக்கரசரும் புகலூரைத்தொழுது போம்பொழுது அரசரைப் பிரிதற்கு மனமில்லாத பிள்ளையார், முத்துச்சிவிகை பின்வரத் தாமும் நடந்து சென்ருர், அப்பொழுது அப்பரடிகள் பிள்ளேயாரை நோக்கி, சிவபெருமான் உமக்களித்த முத்துச்சிவிகை யில் எழுந்தருள் வீராக’ எனப் பணித்தார். அதுகேட்ட பிள்ளையார் இறைவன் திருவருள் அவ்வாருயின் நீவீர் எங்கே செல்கின்றீரோ யானும் அங்கே அடியார். களுடன் வரக்கருதுகின்றேன்’ எனக் கூற அப்பரும், அதற்கிசைந்து முன்னே சென்றனர். பிள்ளையாரும் பரிசனங்களுடன் அவர் பின்னே சென் ருர்.

திருநாவுக்க ரசருடன் அம்பர் மாகாளத்தை யடைந்த பிள்ளையார், அங்கே கோச்செங்களுன் கட்டிய திருவம்பர்ப் பெருந் திருக்கோயிலேப் பாடிப் போற்றினர். பின்பு குங்கிலியக்கலய நாயனர் எதிர் கொண்டு போற்றத் திருக்கடவூரையடைந்தார். மார்க்கண்டர்க்காகக் காலனே யு ைதத்த வீரட்டப் பெருமானப் பரவிப் போற்றிக் கலய நாயனர் இல்லத்தில் திருவமுது செய்தருளித் திருக்கடவூர்த் திருமயானத்தைப் பணிந்திருந்தனர். பின்பு ஆக்கூர் மீயச்சூர், பாம்புரம் முதலிய திருத்தலங்களைப் பணிந்து திருவீழிமிழலேயையடைந்தனர். திருமாலின் வழிபாட் டிற்கு உவந்து விண்ணினின் றிழிந்த விமான த்தில்