பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 12}

  • நாம் திருவாய்மூரில் இருப்போம். எம்மைப் பின் தொடர்ந்து வருக எனக் கூறிப் போயினர். அவரைக் கண்டபொழுதே கைகளேத் தலைமேற் குவித்தெழுந்த அப் பரடிகள், பேரார்வத்துடன் அவரைப் பின் தொடர்ந்து சென்ருர், இவ்வாறு அப்பரடிகளே அழைத்துச்சென்ற இறைவர், அணிமையிலுள்ளார் போற் காட்டி நெடுந்து ரஞ் சென்று வழியிடையே மறைந்தருளினர். அந்நிலையில், திருமறைக் காட்டில் திருமடத்தில் தங்கியிருந்த ஞானசம்பந்தப் பிள்ளேயார் திருநாவுக்கரசரைக் காணுது அவர் திருவாய்மூருக்கு எய்தினர்' என அடியார்கள் சொல்லக்கேட்டு அவரைத் தேடிச்சென் ருர் . வழியிடையே தம்மை அழைத்துப் போந்த இறைவரைக் காணுது வருத்த முற்ற திருநாவுக்கரசர், தம்மை ஆரா அன்பினுல் தேடிவரும் கெழுதகை நண்பராகிய ஞானசம்பந் தரைக்கண்டு மகிழ்ந்தார். அருமறைகளால் அடைக் கப்பெற்ற திருக்க தவைக் குறிப்பறியாது திறக்க முற்பட்ட என்னேப்போலன்றித் திருத்தொண்டின் நிலைமை நன்கு செறியப்பாடி அடைப்பித்த செழித்த மொழிவளமுடைய திருஞானசம்பந்தப் பிள்ளேயார் உதோவந்து நிற்கின் ருர். திருவாய்மூர்ப்பெருமான் என்னேயன்றி இவரையும் மறைத்து நிற்க வல்லரோ என வினவும் முறையில்,

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்ருர் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடையாரிவர் பித்தரே.

என்ற திருக்குறுந்தொகையைப் பாடிப் போற்றினர். அப்பொழுது திருவாய்மூரிறைவர், திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு எதிரே தோன்றி ஆட ல்காட்டி யருள் புரிந்தார். பிள்ளையார் தாம்கண்ட அ ற் பு த க் காட்சியை,