பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 123

மதுரைக்கு எழுந்தருளுதல்

பாண்டி நாட்டிலுள்ள ஆனைமலை முதலிய மலே க ளே த் தங்களுக்குரிய இருப்பிடமாகக்கொண்டு வாழ்ந்த சமணர்கள், தங்கள் சமயத்தைப் பரப்புவ துடன் பிற சமயத்தவர்களே யிகழ்ந்தும் வந்தனர். அந்நாளிற் பாண்டிந்ாட்டை அரசு புரிந்தவன் கூன் பாண்டியன் என் பான். அவன் சமண சமயத்தவர் சூழ்ச்சியிற்பட்டுத் தனக்குரிய சைவசமயத்தை விட்டுச் சமணயிைன்ை. பாண்டிநாட்டுக் குடிமக் களிற் பலரும் சமண சமயத்தை மேற்கொண்டனர். அங்குள்ள திருக்கோயில்களிற்பல பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டன. மதுரை நகர மாந் தரில் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசி யாரும் அமைச்சர் பெருமான கிய குலச்சிறையாரும் தமக்குரிய சிவநெறியை நெகிழவிடாது கடைப்பிடித் தொழுகினர்கள். அவ்விருவரும் திருஞானசம்பந்தப் பிள்ளேயார் திருமறைக்காட்டில் எழுந்தருளியிருத் தலேக் கேள்வியுற்றுப் பிள்ளேயாரை வணங்கிவரும்படி தம் பரிசனத்தார் சிலரை மறைக்காட்டிற்கு அனுப்பி ஞர்கள்.

பாண்டிநாட்டிலிருந்து திருமறைக் காட்டிற்கு வந்த பரிசனங்கள், திருஞான சம்பந்தப் பிள்ளே யாரைப் பணிந்து தம் நாட்டி ன் நிலைமையையும் மங்கையர்க் கரசியார் குலச்சிறையார் ஆகிய இவர்களது அன்பு வணக்கத்தையும் தெரிவித்து நின் ருர்கள். உடனிருந்த அடியார்கள் சிவநெறி பரப்பப் பாண்டிநாட்டிற்கு எழுந் தருள வேண்டும் எனப் பிள்ளையாரை வேண்டிக்கொண் டார்கள். அது கேட்டு ஆளுடைய பிள்ளையார் திரு நாவுக்கரசரைத் தனியே அழைத்துக்கொண்டு திரு மறைக்காட்டுத் திருக்கோயிலுட் சென்று இறைவரைப் பணிந்து மதுரைக்குச் செல்லவேண்டு மென்னும் பெரு விருப்பத்தை நாவரசர்க்குத் தெரிவித்தார். அதனை