பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பன்னிரு திருமுறை வரலாறு


சமணரை வாதில் வெல்லுதல்

பகற்பொழுது போய் இராப்பொழுது தொடங் கியது. ஞானசம்பந்தருடன் வந்த அடியார்கள் பாடும் திருப்பதிகத்தின் இன்னிசை முழக்கம் மதுரை நகர மெங்கும் பரவுவதாயிற்று, அதுகண்டு பொருத சம ணர்கள், கூட்டமாகச்சேர்ந்து பாண்டியனையடைந்து 'மதுரையிற் சைவ வேதியர்கள் கூட்டமாக வந்திருத் தலைக் கண் டமையால் உண்ணுநிலையினர் ஆயினேம்" என அறிவிக்கும் முறையில் யாங்கள் கண்டுமுட்டு’ என்றனர். இத் துன்பச் செய்தியைக் கேட்டமையால் யானும் உண்ணு நிலைமையினுயினேன் என்பான் “யானும் கேட்டு முட்டு என்ருன் பாண்டியன். சின முற்ற அவ்வேந்தன் சிவனடியார்கள் இங்கு வந்திருப் பதன் நோக்கம் யாது’ என வினவினன். சோழ நாட்டிலே சீகாழிப்பதியிலே பிறந்த பார்ப்பனச் சிறுவ னுெருவன் சிவனிடத்திலே ஞானம் பெற்றவனென்று. முத்துச்சிவிகையிலே ஏறியமர்ந்து எங்களே வாதில் வெல்லும்பொருட்டு அடியார்களோடு இங்கே வந்துள் ளான்” எனச் சமணர்கள் கூறினர்கள். இதற்கு நாம் பாது செய்வோம்’ என் ருன் பாண்டியன். சம்பந்தன் என்னும் அவ்வந்தனன் தங்கியிருக்கும் மடத்தில் மந்திரவிச்சையினலே தீப்பற்றும் படி நாம் செய்வோ மால்ை அவன் இந்த நகரத்திலே இருத்தற்கு அஞ்சி ஒடிவிடுவான்’ எனச் சமணர்கள் கூறினர்கள். ஆவது இதுவேயாகில் அதனைச் செய்யப் போமின்’ என்று கூறி அரசன் அவர்களே அனுப்பினன். அரசனது ஆதரவுபெற்றுச் சென்ற சமணர்கள், தங்கள் மந்திர வன்மையில்ை சம்பந்தர் மடத்தில் தீமூட்ட முனைந் தார்கள். மந்திரங்களெல்லாவற்றினும் மிக்கதாகிய திருவைந்தெழுத்தினையே தும் சிவனடியார்கள் தங் கிய திருமடத்தில் சமணருடைய மந்திரங்கள் யாவும் பயன்படாதொழிந்தன. வலியற்ற சமணர்கள் இரவில் மறைந்துசென்று சம்பந்தர் திருமடத்தில் தாமே