பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

பன்னிரு திருமுறை வரலாறு


மன்னன் பிள்ளையாரை நோக்கி நுமது ஊர் யாது என

வினவினன். அதற்கு அவர்,

பிரமனுரர் வேணுபுரம் புகலிவெங்குருப் பெருநீர்த்தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவம்சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங்

காதியாய பரமனுரர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்

பரவுமூரே.

என வரும் திருப்பதிகத்தைப் பாடிப் பிரமபுரம் முதலிய பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய திருக்கழுமலமே நாம் கருதுமூர் என மறுமொழி கூறியருளினர்.

அருகேயிருந்த சமணர்கள், தம் உள்ளத்திற் கொண்ட அச்சத்தை மறைத்துக்கொண்டு கோலும் நூலும் காட்டிப் பிள்ளேயாரை வாதுக்கு அழைத்தனர். சம்பந்தர் அவர்களே நோக்கி உங்கள் சமய நூற்றுணி பினே உள்ளவாறு பேசுங்கள்’ என்ருர். அருகர் கூட்ட மாக எழுந்து பிள்ளையாரைச் சூழ்ந்து கொண்டு பேசத் தொடங்கினர்கள். அதுகண்டு அச்சமுற்ற பாண்டிமா தேவியார் மன்னனே நோக்கி ஞானசம்பந்தரோ சிறு பாலர், சமணர்களோ பலர், நிதுை வெப்பு நோயை இவர் தீர்த்தபிறகு சமணர்கள் வல்லமையுடைய ராயின் வாது செய்யலாம்’ எனக்கூறினர். பாண்டியன் மங்கையர்க்கரசியாரை நோக்கி நீ வருந்தற்க’ என்று கூறிச் சமனர்களேப் பார்த்து நீங்கள் செய்தற்குரிய வாதம் வேறு என்ன இருக்கிறது? நீங்களும் சிவபத்த ராகிய இவரும் என்னுடைய சுரநோயைத் தீர்த்து நீங்கள் தெளிந்துணர்ந்த தெய்வத் தன்மையை என் பால் தெரிவிப்பீராக’ என்ருன். பிள்ளேயார், தம் பால் தாயினும் சாலப்பரிவுடைய மங்கையர்க்கரசி யாரை நோக்கி, பாண்டிமாதேவியே, என்னைப் பால் மனம்மாருத பாலன் எனக்கருதி நீ அஞ்சவேண்டாம். திருவாலவாயிறைவன் நிலைபெற்ற துணையாய் என்