பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii

விளங்குகின்றன; தமிழ் நாட்டின் சரித்திரத்தையே ம ற் றி அமைத்திருக்கின்றன. இத்திருமுறைகள் இசைக்கு இருப்பிடமாக இருக்கின்றன.

இப்பெருமை வாய்ந்த நூலே வெளியிடுவதற்கு உபகாரம் செய்த திருப்பனந்தாள் பூர் காசி மடத்தின் சார்பாக இதன் தலைவர் நீல நீ காசிவா சி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கு அண்ணு மலேப் பல்கலைக் கழகம் தனது நன்றியை முதற் கண் காணிக்கையாகச் செலுத்துகின்றது. அ வ ர் க ள் தமிழுக்கும், சைவத்திற்கும், இசைக்கும் செய்திருக்கும் தொண் டு சொல்லால் சொல்லவொண்ணுதது.

இம் முதல் பாகத்தில் திருஞான சம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவ ருடைய வரலாறுகளும் அவர்கள் பாடியருளிய திருப் பதிகங்களின் சிறப்பும் அகச்சான்றுகளுடன் விரித்து விளக்கப்பெற்றுள்ளன. இதை எழுதியவர்கள் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளர் திரு. க. வெள்ளே வாரனர் ஆவார்கள். அவருடைய தேவ சப் பற்றும், தமிழில் எல்லாத் துறைகளிலும் சிறந்த புலமையும் தமிழ்நாடு நன்கறியும். ஆழ்ந்தகன்ற அறிவுடையர்; அத்துடன் ஆராய்ச்சிப் புலமையும் ஆய்வுத்திறனும் உள்ளவர்; தெள்ளிய இனிய நடை அவருக்கே உரியது. மூவர் வரலாறுகளேயும் அகச் சான்றுகளுடன் இவ்வன வு விரிவாக விளக்கும் நூல் வேருென்றும் வர வில்லை என்று கருதுகின்றேன். இந்நூலே அண்ணு மலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இதனை எல்லோரும் வரவேற்பார்கள் என நம்புகின்றேன்.

இங்ங்னம்,

தி. மு. காராயணசாமி பிள்ளை.