பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 143

பட்டது என்பதனே முத்தமிழ் விரகராகிய ஞான சம்பந்தப் பிள்ளே யாரே, அற்றன்றி யந்தண் மதுரைத்தொகை யாக்கினுைம் தெற் றென்று தெய்வந்தெளியார் கரைக் கோலே தெண்ணிர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னுாரவும் பண்புநோக்கில் பெற்ருென் றுயர்த்த பெருமான் பெருமானுமன்றே.

எனவரும் இத்திருப்பாசுரத்தின் பதினெராந் திருப் பாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இங்ங்னம் ஞானசம்பந்தரால் வைகையில் இடப்பட்ட ஏடு சிவபெருமானது திருவருளால் அந்நதியினில் எதிரேறிச் சென்ற செய்தி,

பருமதில் மதுரைமன் அவையெதிரே

பதிகம தெழுதிலே யவையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே

வசையொடு மலர் கெட வருகரனே.

என வரும் திருக்கழுமலத் திருவிய மகப் பதிகத்தின் திருக்கடைக்காப்பில் தெளிவாகக் குறிக்கப்பட்டமை யறிக.

  • மங்கையிடத்தரனேக் கவி நீரெதிர் ஒட மதித்தருள் செய் தங்குபுகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவ சிகாமணி ' என வும்

வைகையாற் றேடிட்டு வானி ரெதிரோட் டுஞ்

செய்கையால் மிக்க செயலுடையான் ?? எனவும் நம்பியாண்டார் நம்பி ஆளுடைய பிள்ளே யாரைப் போற்றுந் தொடர்களில் வைகையாற்றில் ஏடு எதிரேறிச் சென்ற செய்தி தெளிவாகக் குறிக்கப் பட்டமை காணலாம்.

நின்றசீர்நெடுமாறனுகிய பாண்டியன், தன் அமைச்சரை நோக்கி வாதிற் சூளுரைத்துத் தோல்வி

1 இளுடைய பிள்ளே யார் திருக்கலம்பகம் 15-ஆம்

செய்யுள் 2. 步9 திருத்தொகை.