பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் #45

பாடி, முன்னுெரு நாளில் சோமசுந்தரக் கடவுள் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பொற்பலகை யிட்டருளிய திறத்தை அதன் கண் குறித்துப் போற்றி, அங்ங்னம் அருள் பெற்ற சிறப்புடையவராகிய திருநீல கண்டப் பெரும்பான ரோடும் அளவளாவி யிருந் தருளினர். இத் திருப்பதிகத்தில்,

நக்க மேகுவர் நாடுமோ ரூருமே

நாதன் மேனியின் மாசுண மூருமே தக்க பூமனேச் சுற்றக் கருளொடே

தாரம் உய்த்தது பாணர்க் கருளொடே மிக்க தென்னவன் தேவிக் கணியையே

மெல்ல நல்கிய தொண்டர்க்கணியையே அக்கிகு ரமு துண்கல குேடுமே

ஆலவாயரருைமை யோடுமே.

என வரும் ஆருந் திருப்பாடலில் உள்ள தக்க பூமனேச் சுற்றக் கருளொடே தாரம் உய்த்தது பாணர்க் கருளொடே என்ற தொடர், திருநீலகண்டயாழ்ப் பாணரது யாழ் மழையில் நனேந்து கட்டழியாதபடி ஆலவாயிறைவர் பாணர்க்குப் பொற்பலகையிட்டு அவரது யாழின் ஒசையினே மிகுவித்தருளிய அருட் செயலேக் குறித்தல் காண்க. தமது வேண்டுகோட் கிணங்கிப் பாண்டியனது வெப்பு நோயைத் தீர்த்துச் சால்பினுல் மிக்க பாண்டிமாதேவியாரது மங்கல நானேப் பாதுகாத்தருளிய ஆலவாய்ப் பெருமானது பெருங்கருணேத் திறத்தை இத் திருப்பாடலில் மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே’ எனவரும் தொடரால் ஆளுடைய பிள்ளையார் உளமுருகிப் போற்றியுள்ளமை இவண் நினேக்கத் தகுவதாகும்.

சிவனடியார்கள் தங்கிய திருமடத்தில் நள்ளிரவில் தீயிடுதல் முதலிய தீச்செயல்களைச் செய்து வாதில்