பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 147

யுற்ற சமணர்கள் கழுவேறி உயிர் விடாதபடி அவர் களே ஞானசம்பந்தப் பிள்ளே யார் தடுத்தருளினரென் றும் சாவாயினும் வாதுசெய்யும் இயல்புடைய சமணர் கள் தாங்களே கழுவிலேறி உயிர் துறந்தனரென்றும் பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறியுள்ளமை இவண் நினேக்கத் தகுவதாகும்.

ஆளுடைய பிள்ளேயார் மதுரையில் தங்கியிருக்கும் நாளில், அவரைக் காணவிரும்பிய அவருடைய தந்தை யார் சிவபாத விருதயர், சீகாழியினின்றும் புறப்பட்டு மதுரைக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது ஞான சம்பந்தர் தம் தந்தையாரை நோக்கி அருந்தவத்தீர், குழந்தைப் ப ரு வ த் தி ேல பொற்கிண்ணத்திலே பாலடி சில் ஊட்டி என்னே ஆட்கொண்டருளிய தோணி புரப் பெருந்தகை எம்பெருமாட்டியுடன் இனி திருந் ததே எனக் கழுமலப் பெருமானது நலம் உசாவுதலேப் பொருளாகக் கொண்ட மண்ணினல்ல வண்ணம்’ என்ற திருப்பதிக த்தைப் பாடிப் போற்றினர். திருவால வாய் இறைவ ைரக் காலங்கள் தோறும் கும்பிட்டு மதுரையில் தங்கியிருந்த பிள்ளேயார், பாண்டி நாட்டி லுள்ள ஏனைய தலங்களே வணங்கு தற்குப் புறப்பட் டருளினர். அவரைப் பிரிந்துறைதலாற்ருத பாண்டிய னும் மங்கையர்க்கர சியாரும் குலச் சிறையாரும் அவருடன் தொடர்ந்து சென்ருர்கள். ஞானசம்பந்தர் திருப்பரங்குன்றம், ஆப்பனூர், திருப்புத்து , கானப் பேர், சுழியல், குற்ருலம், நெல்வேலி முதலிய தலங்களே வணங்கித் தமிழ்மாலே பாடிப்போற்றி அடியார்களுடன் திருவிராமேச்சு ரத்தை யடைந்தனர். மன்னவனுகிய இராமபிரான் இராவண னேக் கொன்ற பழி நீங்க இராமேச்சுரத்தில் சிவபெருமானே ப் பூசனை புரிந்த தொன்மை வரலாற்றினே அமைத்துத் திருப்பதிகம் பாடி இறைவனே வழிபட்டு அடியார்களுடன் அத்தலத் தில் தங்கியிருந்தார். பாண்டிமாதேவியாரும் குலச் சிறையாரும் அடியார்கள் திருவமுது செய்தற்கு வேண்