பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 178

தொண்டர் புராணத்தில் திருநாவுக்கரசரது வரலாறு 429 செய்யுட்களால் திருநாவுக்கரசர் புராணமாக விரித்துரைக்கப் பெற்றுளது. நாவுக்கரசர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகங்களில் அவரது வாழ்க் கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றுள்ளன. இக் குறிப்புக்களே ஆதாரமாகக்கொண்டு அப்பரடி களது வரலாற்றை யறிந்துகொள்ளுதல் இன்றிய ைை

யாததாகும்.

குடும்ப நிலே

திருமுனைப்பாடி நாட்டிலே தெய்வநெறிச் சிவம் பெருக்குந் திருவாமூர் என்னும் ஊரிலே வேளாண் மரபிற் குறுக்கையர் குடியிலே புகழஞர் என்பாரும் அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் மாதினியார் என் பவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மனேயறம் நிகழ்த்தினர்கள். அவ்விருவருக்கும் திருமகளாகத் திலகவதியார் என்னும் புகழ்ச் செல்வியார் தோன்றி ஞர். திலகவதியார் பிறந்த சில ஆண்டுளுெக்குப் பின் அவர்க்குத் தம்பியாராக மருணிக்கியாரென்பார், அல கில் கலைத்துறை தழைப்ப, அருந்தவத்தோர் நெறி வாழ, ஒளி விளங்கு கதிர் போல வந்து பிறந்தருளி ஞர். அவரைப்பெற்று வளர்த்த பெரியோர்கள். உரிய நாளிற் பள்ளியிலமர்த்திக் கலே பயிலச் செய்தார்கள். திலகவதியார்க்குப் பன்னிரண்டு வயது தொடங்கி நடைபெற்றது.

உருவும் திருவும் உயர் பேரொழுக்கமும் வாய்ந்த கலிப்பகையாரென்னும் வேளாண் குடித் தலைவர், திலக வதியாரை மணந்துகொள்ள விரும்பிப் புகழர்ைபால் பெரியோர் சிலரை மணம் பேச அனுப்பினர். குண முங் குலமும் ஒத்தமை கேட்டு மகிழ்ந்த புகழனுர், தம் அருமைத் திருமகளார் திலகவதியாரைக் கலிப்பகை யார்க்கு மணஞ்செய்து கொடுப்பதாக மகிழ்ச்சியோடு உடன் பட்டார். மணம் பேசச் சென்ற பெரியோர், புகழரைது இசைவினேக் கலிப்பகையார்க்குத் தெரி வித்தார்கள்,