பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

பன்னிரு திருமுறை வரலாறு


மைப்பிடித்து எழுப்ப ஒருவாறு சோர்வகன்று எழுந் தார். உடுத்த பாயும் பிடித்த குண்டிகையும் தொடுத்த மயிற்பீலியும் அறவே விட்டு நீங்கத் தூய வெள்ளேத் துணியினே இடையில் உடுத்துத் தமக்குப் பற்றுக்கோ டாகக் கைதந்து உடன் வருவாரைப் பற்றிக்கொண்டு சமணப் பள்ளியைக் கடந்து நள்ளிரவில் ஒருவரும் காணுவண்ணம் பாடலிபுத்திரத்தினின்றும் புறப்பட் டார். சூலேநோய் பின் தொடரத் தமக்கையாரை அடைந்துய்வேன் என்ற பெருவிருப்பம் ஈர்த்து முன் செல்லத் திருவதிகையில் திலகவதியார் இருந்த திரு

? _ శ్లేfచ? శ్రీ హౌ ఓ-బీ

திருமடத்தினுட் சென்ற மருள் நீக்கியார், தம் தமக்கையாராகிய திலகவதியார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, நமது குலத்திற்ருேன்றிய முன்னுேர்கள் செய்த நற்றவத்தின் பயனரக த் திகழும் பெரியீர்! இவ் வுடம்பைப்பற்றிய சூலை நோயினைப் பொறுத்த லாற் ருது தும் திருவடிகளேச் சரணடைந்தேன். இனி யான் அறியாமையிற்பட்டு மயங்காமல் துன்பக் கடலினின் றும் பிழைத்துக் கரையேறுதற்குரிய நன்னெறியினே உபதேசித்தருள் வீராக’ என விண்ணப்பஞ் செய்தார். தம்பியாரது மன நிலேயினே யு0ை:ர்ந்த திலகவதியார், சிவபெருமானது திருவருளே நினேந்துரு கிக் கைதொழுது தம்பியாரை நோக்கி உறுதிப் பொருளாகிய தெய்வங் கொள்கையில்லாத புறச்சமயப் படுகுழியில் விழுந்து பெருந் துயருழந்தீர் எழுந்திரீர்” என மொழிந்தார். அது கேட்ட மருள் நீக்கியார், சூலே நோயுடன் நடுக்க முற்றெழுந்து தொழு தார். திலகவதியாரும் அவரை நோக்கி நூம்மைப் பற்றிய இச் சூலேநோய் இறை வனது திருவருளே யென அறிவீராக. தன்னேச் சர னடைந்தாரது பாசத்தளே யை நீக்கி இன்னருள்புரி யும் இறைவனடிகளைப் பணிந்து பணி செய்யும்’ எனப் பணித்தார். மருள் நீக்கியார் தமக்கையாரது அருட்