பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 岔空器

பெற்றும் வரும் நிலையில் இந் நிறைகதவம் அடைத் திடும்படி பாடியருளும் என வேண்டிக்கொண்டார். அதுகேட்ட பிள்ளேயார் சதுரம் மறை" என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தினத் தொடங்கி முதற் பாடலப் பாட, மறைக்காட்டீசாருளால் திருக்கதவம் விரைவில் அடைக்கப்பெற்றது. அதுகண்டு நாவுக் கரசரும் பிள்ளையாரும் நம் பெருமான் அருள்செய்யப் பெற்ருேம் எனப் பெரிதும் மகிழ்ந்து இறைவனப் போற்றினர்கள். பிள்ளையார், எடுத்த திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்களேயும் பாடித் திருக்கடைக்காப் புச் சாத்தியருளினர். அன்று முதலாக அத்திருக்கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய வழக்கத்தைப் பெறுவ தாயிற்று.

இவ்வாறு வேதங்களால் வழிபடப்பெற்று அடைக் கப்பட்ட திருக்கோயிற் கதவு. அவ் வேதங்களில்வல்ல அன்பர் எவரும் வாராமையால் நெடுங்காலம் திறக்கப் பெரு திருந்து பின்பு திருநாவுக்கரசர் பாடிய செந் தமிழ்ப் பதிகத்தால் திறக்கப்பெற்றதாகிய இவ்வற்புத நிகழ்ச்சி, பண்டை நான் மறைகளுக்கும் திருநாவுக்கர சர் அருளிய தேவாரத் திருமுறைகளுக்கும் சிறிதும் வேற்றுமையில்லே யென் பதனத் தெளிவாக வலியுறுத் தல் காணலாம். திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந் தருளிய செந்தமிழ் மறைகளாகிய திருமுறைகளின் சிறப்பினே,

மணியினை மாமறைக்காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள் கதவந் திறப்பித்தன தெண்கடலிற் பிணியன கன்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான்றன் அருந்தமிழே.

என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பி

யாண்டார் நம்பி விரித்துரைத்துப் போற்றியுள்ளமை இவண் நோக்கத் தகுவதாகும்.