பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

பன்னிரு திருமுறை வரலாறு


என்ற திருப்பாடலைப் பாடிப் போற்றினர். அப்பொழுது உமையொரு பாகராகிய இறைவர், ஆளுடைய பிள்ளேயார் காண நேரே தோன்றி ஆடல் காட்டி அருள்புரிந்தார். அவ்வழகிய தெய்வக்காட்சியினக் கண்ட திருஞானசம்பந்தர், தளரிளவளரென வுமை பாட என்ற திருப்பதிகத்தினப் பாடிப் போற்றித் தாம் கண்ட தெய்வக்காட்சியினத் தம் கெழுதகை நண்பர் திருநாவுக்கரசர்க்குக் காட்டி மகிழ்ந்தார். நண்புடைய ஞானசம்பந்தர் காட்டிய வண்ணம் அம்மையப்பாது ஆடற் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அப்பாடிகள்,

பாட அடியார் பரவக் கண்டேன்

பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்

அங்கை யனல்கண்டேன் கங்கையாளக் கோட லாவார் சடையிற் கண்டேன்

கொக்கி னிதழ் கண்டேன் கொன்றை கண்டேன் வாடற் றலையொன்று கையிற் கண்டேன் வாய்மூ ரடிகன் நான்கண்ட வாறே.

என்னும் திருத்தாண்டகத்தைத் தொடங்கி இத்திருப் பதிகத்திலுள்ள திருப்பாட்டிறுதி தோறும் வாய்மூரடி களே நான் கண்டவாறே எனத் தாம் கண்ட தெய்வக் காட்சியை வியந்துரைத்துப் போற்றிப் பரவிஞர். இங்ஙனம் நாவுக்கரசர்க்கும் ஞானசம்பந்த க்கும் ஆடல் காட்டி யருள் புரிந்த இறைவர், அவ் விரு பெருமக்களும் பாடியருளிய செந்தமிழ்ப் பாமா லேகளை அன்புடன் ஏற்று மறைந்தருளினர் நாயன்மார் இருவரும் திருவாய்மூரடைந்து சிவபெருமானே யிறைஞ் சிப் போற்றி அங்குச் சிலநாள் அமர்ந்திருந்தார்கள்

இவ்வாறு திருநாவுக்கரசர் , மறைக் காட்டுத் திருக் கோயிற் கதவினத் தாம் அரிதில் திறக்கப்பாடியதும்