பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை 7

தில்லைக்கலம்பகமும் திருஞானசம்பந்தப் பிள்ளையா ைரப் போற்று முகமாக அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களே எழுதுமறை ’ எனச் சிறப்பித்தல் காண்க. வேதங்கள் ஐய என ஓங்கி ஆழ்ந் தகன்ற துண்ணிய கிைய மு. மு. மு. த ற் க ட வு ளே ப் * பீ டு ைட ய பி ர மா பு ர மேவிய பெம்மான் இவனன்றே ' எனத் திருஞானசம்பந்தப் பிள்ளே யார் தம்முடைய தந்தையார்க்குக் கையாற் சுட்டிக் காட் டிய எளிமையும் இனிமையும் உடைமையானும், அடி யார்கள் இறைவன்பால் வேண்டிய வேண்டியாங்குப் பெறுதற்குத் துணேபுரிந்தும் உலகமக்களது தீராத நோய் தீர்க்கும் மந்திரங்களாகியும் காணுதற்கரிய கடவுளே உலகமக்கள் கண்காணக் காட்டியும் இறை வனது திருவருளே உலகத்தார்க்குத் தெளிவாக விளக் குவன ஆதலானும் வேத நூல்களினும் மேம்பட்டு விளங்குவன இத் தெய்வத்தமிழ்த் திருமுறைகளென் பர் பெரியோர். திருவருட் செல்வமாகிய இத்திரு முறைகளேத் தன் பாற் கொண்ட சிறப்புடைமை கருதி ' ஞால மளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் ” எனச் சேக்கிழார் பெருமானுற் போற்றப் பெறும் பெருஞ்சிறப் பினை நமது தமிழ்மொழி பெற்றுத் திகழ்கின்றது.

திருமுறையென்னும் இப்பெயர் வழக்கினே, "திரு முறையெழுதுவோர் வாசிப்போர் ” எனக் கணநாத நாயனர் புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் குறிப் பிட்டுள்ளார்கள். திருமுறை யென்னுஞ் சொல் வழக்கு மூன்ருங்குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட் டுக்களில் தான் முதன் முதற் காணப்படுகின்றது. இவ் - வேந்தன் காலத்துக்கு முன்னுள்ள கல்வெட்டுக் களி லெல்லாம் தேவார ஆசிரியர் மூவரும் பாடியுள்ள திருப்பாடல்கள் திருப்பதியம் எனவே குறிக்கப்பெற் றுள்ளன. எல்லாம் வல்ல இறைவனே இயலி ைசத் தமிழ்ப் பாடல்களால் உளமுருகிப் போற்று முகத்தான் அப்பெருமானே அடைந்து இன்புறுதற்குரிய எளிய வழியினே உலகிற்கு அறிவுறுத்திய பெரியோர் தேவார