பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 愛55

புராணம் என வழங்கும் இப்பெருங்காப்பியம், தொடக் கம் முதல் முடிவு வரை சுந்தரமூர்த்தி சுவாமிகளது வர் லாற்றைத் தொடர்பாக விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளது. இந்நூ ல், சுந்தரர் திருவாய் மலர்க் தருளிய திருத்தொண்டத் தொகையின் பொருளே விளக்குங் கருத்துடன் அத்திருப்பதிகத்திற் போற்றப் பெற்ற திருத்தொண்டர்களின் வரலாறுகளே முறையே விரித்துரைப்பதாகலின், திருத்தொண்டத் தொகைவி யெனவும் திருத்தொண்டர் புராணம் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. சுந்தரமூர்த்தி சு வ மி க ள து வரலாற்றை உணர்ந்துகொள்வதற்கு அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களும் திருத்தொண்டத் தொகையின் வகையாகிய திருத்தொண்டர் திருவந் தாதியும் அதன் விரிய கிய திருத்தொண்டர் புராண மும் சிறந்த ஆதாரங்கள வன. கக் கொண்டு சுந்தரரது வரலாற்றை ஒரு சிறிது நோக்கு வோமாக.

இவற்றைத் துனேயசி

  • يتبع نية தோற்றம்

திருக்கயிலாய மலேயிலே சிவபெருமானுடைய அடியார்களுள் ஒருவராகிய ஆலால சுந்தாரென்பார், இறைவனுக்கு மலர் கொய்து மாலே தொடுத் தணிதலும் திருவருள் வண்ணமாகிய திருநீற்றினே யேந்தி நிற்றலு மாகிய அணுக்கத்தொண்டினே மேற்கொண்டவராவர். அவர் ஒருநாள் வழக்கம்போல் இறைவனுக்குரிய நறு மலர்களைப் பறித்துவரத் திருநந்தன வனத்தையடைந் தார். அப்பொழுது உமையம்மையாருடைய சேடியர் கள கிய அணிந்திதை, கமலினி ஆகிய இருவரும் அத் திருநந்தவனத்தில் மலர் கொய்து நின்றனர். ஆலால சுந்தரர் இறைவனது திருவருளால் அவ்விருவரையுங் கண்டு காதல்கொண்டார். அம்மகளிர் இருவரும் அவ் வண்ணமே சுந்தராது பேரழகில் ஈடுபட்டுத் தம் உள் ளத்தை அவர் பாற் செலுத்தினர்கள், ஆலாலசுந்தரர்