பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 265

வந்த மறையவ ை நோக்கி நம்பியாரூரரை அடிமை எனக் கூறும் இவ்வுரையினே ஆட்சி, ஆவணம், சாட்சி யென்ற மூன்றனுள் ஒன்றைக் கொண்டு நீவிர் இச் சபையின் முன் உறுதிப்படுத்துதல் வேண்டும்’ ன மொழிந்தனர். நாவலூரன் சின மிகுதியால் என் கையிலிருந்து பறித்துக் கிழித்த அடிமைச்சீட்டு படி யோலயாகும். அதன் மூலவோலேயை அவை யக் கார் முன் காட்டுதற் கென்ற்ே போற்றிவைத்துள்ளேன்’ என்ருர் கிழவர். அங்ஙனமாயின் அவ்வோலேயைக் காட்டுக’ என அவையோர் பணித்தனர். இவன் முன் போற் கிழித்தெறியாதபடி நீங்கள் பார்த்துக் கொள்ள வல்லீரா யின் அவ்வோலேயைக் காட்டுவேன்? என் ருர் மறைமு தியோர். நான் மறைவல்ல மறை யவரே, நாங்கள் தீங்கு நேராமற் பார்த்துக்கொள் கிருேம் என அவையத்தார் கூறினர்கள். முதியவர் மூல ஒலேயாகிய ஆவணத்தை அவையத்தார் முன் எடுத்துச் சென்ருர், அவையினர் பணித்த வண்ணம் கரணத்தான் அவ்வோலேயை வாங்கிப் படிக்கத் தொடங்கினன்.

"திருநாவலூரில் வாழும் அருமறைவல்ல ஆதி சைவகிைய ஆரூரன் எழுதியது; வெண்ணெய் நல் லூரில் வாழும் முனிவர் பெருமானுகிய பித்தனுக்கு யானும் என் குடும்பத்தில் வழிமுறை வழிமுறையாக இனி வருபவர்களும் அடித்தொண்டு செய்தற்கு இதுவே ஆவண வோலேயாகும். இரு திறத்தேமும் உள்ளம் ஒத்த நிலையில் இதனே எழுதிக் கொடுத்தேன். இதற்கு இவை என் கையெழுத்து” என அழகிய தமிழ் நடையில் எழுதப்பெற்றிருந்த அவ் வாசகத்தைக் கரணத்தான் படித்த பின்னர் அதன் கண் சான் ருள சாகக் கையெழுத் திட்டர்களுடைய கையெழுத்துக் களேயும் ஒப்புநோக்கி இவை ஏற்றுக் கொள்ள த் தக்கன என அவையோர் ஒத்துக்கொண்டனர். பின்பு நம்பி