பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

பன்னிரு திருமுறை வரலாறு


என நம்பியாண்டார் நம்பி இப்பதிகப் பொருளே விரித் துரைத்தலாலும் நன்கு புலகுைம். சிவபெருமானுக்கு மீளா அடிமையாய்த் தொண்டு புரியும் கடமை தமக்கு உண்டென்பதனே இப்பதிகப்பாடல்தோறும் நம்பியா ரூரர் உடன் பட்டுப் போற்றியுள்ளமை, அவர் அருட் டுறையிறைவதால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற அற்புத திகழ்ச்சியை வலியுறுத்துவதாகும்.

நாவலூர் நம்பியை மணந்துகொள்ள இருந்த புத் துர்ச் சடங்கவி சிவாசாரியார் திருமகளார், திருமணம் தவிர்ந்தமையால் நம்பியாரூரரையே தமது வழிபடு தெய்வமாகத் தியானிக்கும் மெய்யுணர்வுடைய ராய் இவ்வுலக வாழ்வை நீத்து உயர்ந்த சிவலோக வாழ் வாகிய பேரின்பம் எளிதிற் கைவரப்பெற்று இறைவு ன டி சேர்ந்தார்.

வன் ருெண்டராகிய நம்பியாரூரர், தம்மை வலிய ஆட்கொண்டருளிய அருட்டுரை யிறைவறை இறைஞ் சித் தம்முடைய ஊராகிய திருநாவலூரை அடைந் தார்; அங்குக் கோயில் கொண்டருளிய சிவபெரு மானைப் பணிந்து செந்தமிழ்ப் பாமாலை பாடி ப் போற்

நிஞர்.

தவநெறி தந்தருள வேண்டுதல்

பின்னர் அ ரு .ே க யு ள் ள திருத்துறையூரை யடைந்து அங்குத் திருக்கோயில் கொண்டெழுந் தருளிய சிவபெருமானே நறுமலர்களால் அருச்சித்து வணங்கி எளியேன் பிறவிக் கடலில் வீழ்ந்து துயருளு வண்ணம் தடுத்தாட்கொண்டருளிய பெருமானே, ஐம்புலன்களும் ஒடுங்கப்பெற்று நின்னே வழிபட்டு மகிழும் வண்ணம் அடியேற்குத் தவநெறி தந்து அருள்புரிவாயாக’ என வேண்டி,