பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை கண்டது 3 :

உரிய பருவத்தில் உபநயனஞ் செய்யப்பெற்று வேத முதலிய கலேகளே ஒதிவரும் நாளில், ஒருநாள் தந்தையார் வேற்றுார்க்குச் செல்ல நேர்ந்தது. அன்று பொல்லாப் பிள்ளேயார்க்குச் செய்ய வேண்டிய பூசை யைத் தம் புதல்வரைச் செய்யும்படி சொல்லிவிட்டு அவர் வெளியூர்க்குச் சென் ருர் தந்தையார் சொல் லியபடி பொல்லாப் பிள்ளையார்க்குப் பூசனே புரியச் சென்ற அவ் விளைஞர் , பிள்ளையார்க்குத் திருமஞ்சனம் முதலிய எல்லாஞ் செய்து திருவமுதினேப் பிள் ளேயார் திருமுன் வைத்த 'எம் பெருமானே திருவமுது செய் தருளல் வேண்டும் என ேவ ண் டி நி ன் ரு ர். பிள் இாயார் திருவமுது செய்யவில்லே. நிவேதனம் என்பது தெய்வத்திற்குத் திருவமுது காட்டுதல் என் னும் பொருளில் வழங்கும் சொல்லாகும். நிவேதிக்குந் திருவமுதை இறைவனே உட்கொள் வான் என்பது அவ்விளங் குழந்தையின் எண் ணமாகும். அவ்வெண் ண த்தால் துரண்டப்பட்ட இளேஞர், அடியேன் ஏதே லும் தவறு செய்ததுண் டோ? அடியேன் நிவேதித்த திருவமுதினை உண்ணுதது ஏன் ? என்று சொல்லிக் கொண்டு தமது தலையைக் கல்லிலே மோதப்புக்கார். உடனே பொல் லாப்பிள்ளே யார் நம்பி பொறு’ என்று சொல்லித் தடுத்து, நிவேதன முழுவதையும் உட் கொண்டருளினர். அது கண்ட இளைஞர் மனமகிழ்ந்து * எம்பெருமானே இன்று மிகவும் நேரங்கடந்த நிலே யில் அடியேன் பள்ளிக்கூடத்திற்குச் சென்ருல் எங்கள் ஆசிரியர் அடிப்பார். ஆதலால் எல்லாக் கலே நூல்களே யும் தேவரீரே அடியேனுக்கு ஒதுவித்தல் வேண்டும்’ எனக் குறையிரந்து நின்ருர். அவர் விரும்பிய வண் ண மே பிள்ளையாரும் அவ்விளைஞர் க்கு எல்லாக் கலே களேயும் ஒதுவித்தருளினர். இங்ங்னம் பொல்லாப் பிள்ளைய ரால் ஆட்கொள்ளப் பெற்றமையால் அவ் விளைஞர் நம்பியாண்டார் நம்பி யென அழைக்கப் பெற்றுத் திருவிரட்டை மணிமாலை யென்னும் தமிழ்ப் பிரபந்தம் பாடி, தம்மையாட்கொண்ட பொல் லாப பிள்ளேயாரைப் போற்றிப்பரவினர்.