பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

பன்னிரு திருமுறை வரலாறு


நீள நினேந்தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன் வாள ன கண்டைவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி யெம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்

பெற்றேன் ஆளிலே யெம்பெருமான் அவை யட்டித் தரப்பணியே.

என வரும் திருப்பதிகத்தைப் பாடி ப்போற்றி நெல்லே யெடுத்துச் செல்லுதற் குரிய ஏவலாட்களே த் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற்பொழுது நீங்கிய பின் நம்முடைய பூதகணங்கள் பரவை விடு மாத்திர மன்றித் திருவாரூர் முழுவதிலும் நெல்லேக் கொண்டு வந்து குவித்துவிடும் என்றதோர் அருள் வாக்கு, விசும் பிடை யெழுந்தது. அது கேட்டு மகிழ்ந்த சுந்தரர், சிவ னருளைத் துதித்துப் போற்றித் திருவாரூரை யடைந்து நிகழ்ந்த செய்திகளைப் பரவையார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார். அன்றிரவே பூதகணங்கள் குண்டை யூரிலுள்ள நெற் குவியலே வாரிக்கொண்டு சென்று பரவையார் மாளிகையிலுந் திருவாரூர் வீதியிலும் நிரப்பிவிட்டன . மறுநாள் வைகறைப் பொழுதில் துயி லுணர்ந் தெழுத்த பரவையார், தம் மாளிகையிலும் திருவாரூர் வீதிகளிலும் நிரம்பிய நெற்குவியல்களைக் கண்டு வியப்புற்ருர்; ஆரூர் மக்கள் அவரவர்கள் மனே முகப்பிலுள்ள நெற்குவியலே அவர்க ளே வாரிக்கொள்ள லாம் எனப் பறையறைவித்தார்.

பரவையார் பசியால் வருத்தமுற்றதனேக் கண்ட சுந்தரர் அவர் பொருட்டுத் தாம் குண்டையூரிற் பெற்ற தெற்குவியலேக் கொண்டுசேர்த்தற்குரிய பணியாட் கலைத் தந்தருள வேண்டுமெனக் கோளிலிப்பெரும ன் பால் வேண்டிக்கொண்டன ரென்பது,

  • கோனிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்

பெற்றேன் ஆளிலே யெம்பெருமான், அவை யட்டித் தரப்பணியே ? என வும்,

பாவையவள் வாடுகின்ருள்