பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

பன்னிரு திருமுறை வரலாறு


புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை வணங்கிச் செந். தமிழ்ப் பதிகம் பாடித் திருக்கச்சூர் ஆலக்கோயிலே யடைந்து அங்கு வீற்றிருக்கும் பெருமானப் பணிந்து போற்றிக் கோயிற் புறத்தனேந்தார். அப்பொழுது வெயில் வெம்மை மிக்க நண்பகற்பொழுதாகியும் அவர்க்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லே. அந் நிலையில் நம்பியாரூரர் திருக் கோயிலின் மதிற்புறத்தே ஒருபால் தங்கியிருந்தார். அடி யார் பசித் திருக்கப்பொருத சிவபெருமான், மறைய வர் வடி வுடன் அங்கு வந்து வன்ருெண்டரை நோக்கி 'நீர் பசியால் மிகவும் வட்டமடைந்துள்ளீர், யான் சிறிது நேரத்திற்குள் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவுகொண்டு வருமளவும் இவ்விடத்திலேயே யிருப் பீர க’ என்று சொல்விச் சென்று அண்மையிலுள்ள வீடு களில் திருவமுதும் கறியும் இரந்துபெற்று நம்பியாரூரரை யனுகி இதனை யுண்டு பசி தீரும்’ எனக் கொடுத் தருளினுர். அந்தணரது பேரன்பைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அவர் தந்த உணவினே விருப்புடன் வாங்கி அடியார்களுடன் அமுது செய்தார் அந் நிலேயில் சோறிரந்து கொணர்ந்த மறையவர் விரைவில் மறைந் தார். அது கண்ட சுந்தரர், தம்பால் மறையவராய் வந்து பசிதீர்த்தருளியவர் சிவபெரு மானே யென வுணர்ந்து வெம்மை மிகுந்த இவ்வுச்சிப் பொழுதிலே திருவடி வருந்த வீடுதோறும் சென்றிரந்து எமக்குச் சோறளித்த இப்பெருங் கருணேயை என்னென்பேன்" என நெஞ்ச நெக்குரு கி மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணி சரும்பி மலேமேல் மருந்தாகிய ஆலக்கோயிற் பெருமா னேப் பணிந்தார்.

முதுவாயோரி கதறமுதுகாட் டெரிகொண்டாடல்

முயல் வானே மதுவார் கொன்றைப் புது வீ சூடும் மலேயான் மகள்தன்

ł06Ø 6}q (T 6T!! கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக் கண் டாலடியார்

கவலாரே அதுவே யாமா றிதுவோ கச்சூ ராலக் கோயிலம்மானே.