பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

பன்னிரு திருமுறை வரலாறு


வணங்கி மகிழ்ந்து தொண்டர்களுடன் அப்பதியிற் சில நாள் அமாந்திருந்தார். அம் மலேயிலிருந்தவண்ணமே வடநாட்டிலுள்ள திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய திருத்தலங்களேயும் நினைந்திறைஞ்சிச் செந்த மிழ்ப் பாமாலே பாடிப் போற்றினர். பின்னர் அங்கி ருந்து புறப்பட்டுப் பல தலங்களேயும் பணிந்து பாடிக் கடற்கரையிலுள்ள திருவொற்றியூரை யடைந்து அங் குக் கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் எழுத்தறி யும் பெருமானே நாள்தோறும் மூன்று காலங்களிலும் ஆர்வமுறத் தொழுது அப்பதியில் தங்கியிருந்தார்.

சங்கிலியார் திருமணம் திருக்கயிலாய மலையிலே உமாதேவியார்க்குப் பணிபுரியும் சேடியர்களாய் முன்னர் ஆலால சுந்தர ரைக் காதலித்த மகளிர் இருவருள் கமலினியார் என் பார் திருவாரூரில் நங்கை பரவையாராய்த் தோன்றி நம்பியாரூரரை மணந்தனர் என்ற செய்தி முன்னர்க் கூறப்பட்டது. மற்ருெருவராகிய அணிந்தி ைதயார் என்பார் தொண்டை நாட்டில் ஞாயிறு என்னும் ஊரில் வாழும் ஞாயிறு கிழவர் என்ற வேளாளர்க்கு அருமைத் திருமகளாகத் தோன்றிச் சங்கிலியார் என் னும் பெயருடன் வளர்ந்து வந்தார். உமாதேவியார் திருவடிகளிலே நிறைந்த பேரன் புடைய ராய் வளரும் சங்கிலியார், பெதும்பைப் பருவமெய்திர்ை. அவரு டைய தந்தையார், தம் மனேவியாரை நோக்கி நம்மு டைய மகளுக்கு அமைந்த வடிவு, பண்பு முதலிய நலன்கள் யாவும் மண்ணுலகில் வாழ்வார்க்கு இசையா வண்ணம் மேற்பட்டுள்ளன. இவளுக்குத் திருமணம் திகழும் பருவமும் அணுகியது. இதற்கு யாது செய் வோம்’ என் ருர், அது கேட்ட மனேவியார் இவளுக்கு இசைந்த வகையில் ஒருவரைக் கணவராகக் தேர்ந்து திருமணஞ்செய்து கொடுப்பீராக’ எனக் கூறினர். இவ் வாறு தாயும் தந்தையும் தன் திருமணங் குறித்துப்