பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

பன்னிரு திருமுறை வரலாறு


டைய தோழராகிய வெண்பாக்கத்திறைவர் கோயி லுள் இருந்துகொண்டே இணக்கமில்லாத மொழி ய ல் உளோம் போகீர்’ என மறுமொழி கூறி ஊன்று கோலொன்றைக் கொடுத்தருளிஞர். இச்செய்தி,

பிழையுளன. பொறுத்திடுவ, ரென்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாரா தே படலமென்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன உழையுடைய லுள்ளிருந் துளோம்போகி ரென்ருனே.

பொன்னவிலுங் கொன்றையினுய் போய்மகிழ்க்கீ

ழிருவென்று சொன்னவெனேக் காணுேமெ சூளுறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே இங்கிருந்தாயோவென்ன ஒன்னலரைக் கண்டாற்போ லுளோம்போகீரென்ருனே

மான் நிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்ல ம் தோன்றவருள் செய்தளித்தா யென்றுரைக்க வுலகமெலாம் ஈன்றவனே வெண் கோயி லிங்கிருந்தாயோ வென்ன ஊன்று வதோர் கோலருளி யுளோம்போ கீ ரென்ருனே.

என வரும் திருப்பாடல்களால் நம்பியாரூரர் வெண்பாக் கத்திறைவர் செயலே விரித்துரை த்தலால் நன்கு புல கும்.

இடக்கண் பெறுதல்

இறைவனருள் என்னளவில் இவ்வளவுதான் போலும் என எண்ணி வருத்தமுற்ற சுந்தரர், வெண் பாக்கத்தை விட்டுநீங்கிப் பழையனூரையடைந்தார். அங்கு, காரைக்காலம்மையார் தலேயாலே நடந்தெய் திய திருவாலங்காட்டெல்லேயினே யிறைஞ்சி நின்று 'முத்தா முத்தி தர வல்ல என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடிப் பரவினர். பின்பு திரு ஆறல் என்ற தலத்தைப் பணிந்து கற்ருேர் வாழும் க சூ சிநகரத்தையடைந்தார். உலகமீன்ற பெருமாட்டி யாராகிய உமையம்மையார் எழுந்தருளிய திருக்காமக்