பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு § 29

திலேயிற் சுந்தரர் பெரிதும் கலக்கமடைந்து இனி இதற்கு என் செய்வோம் ' என நெடிது நினேந்து தம் மேற் பரவையார் கொண்ட வெகுளியைத் தணித் து வரும்படி உலகியல் நடைமுறைகளே நன்குனர்ந்தி பெரியோர் சிலரை அனுப்பினர். சுந்தரரால் அனுப்பப் பெற்ற பெரியோர்கள் , பரவையார் மாளிகையை யடைந்து அவ்வம்மையார் மனங்கொளத் தக்கவகை யில் வேண்டும் நியாயங்களே எடுத்துரைத்து நீவிர் நம்பியாரூரருடன் முன் போலக் கூடியிருத்தல் வேண் டும் என வேண்டினர், சுந்தரர் பாற் செற்றங்கொண் டிருந்த பரவையார், அமைதி கூறவந்த அறிஞர்களே நோக்கி, ' குற்றம் பொருந்திய நம்பியாரூரர்க்குச் சார்பாக நீங்கள் இவ்வாறு கூறுவீர்களாயின் என் னுயிரைத் துறப்பேன் என வருந்திக் கூறிஞர். அம் மொழிகேட்டு அவருடைய மன நிலேயினே யறிந்து அச்ச முற்ற பெரியோர்கள், சுந்தரர் பாற் சென்று நிகழ்ந்த தனே த் தெரிவித்து அமைந்தனர்.

இங்ங்ணமாக, அன்புடைய பரவையாரை அணுகப் பெருது துன்புற்று வருந்தும் சுந்தரர், எல்லோரும் அயர்ந்து துயிலும் நள்ளிரவிலே தம் தோழராகிய வீதிவிடங்கப்பெருமான் திருவடிகளே நினேந்து போற்றி * என்னே அடிமைகொண்டருளிய பெருமானே, முன்னே வினேயால் இத்துன் பத்திற்குக் காரணமாகிய பரவை யின் பால் நீரே இந்த இரவுப் பொழுதிற் சென்று அவள் என்பாற்கொண்ட ஊடலைத் தணிவித்தருள்வீராயின் யான் உயிர்தாங்கி யிருத்தல் கூடும். இதுவன் றி என் குற்ை செய்யத்தக்கது ஒன்றுமில்லை என வேண் டிப் போற்றினர். அந்நிலையில் அடியார்களது துன்பத் தினேக் காணப்பொருத அருளாளராகிய சிவபெருமான், நெடியான் அறியா அடிமலர்கள் நிலத்தில் தோய எழுந்தருளித் தம் தோழராகிய சுந்தரரையடைந்து நினது துயரம் யாது என வினவினர். அருளே