பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 33 i

போன்று இங்கு எழுந்தருளியதன் காரணம் என்ன ? என வினவினர். அதுகேட்ட மறையவர் நங்கையே நான் சொல்வதை நீ மறுக்காமல் செய்வாயானல் சொல்லுவேன் என்ருர். தீவிர் சொல்லக் கருதிய தனச் சொல்வீராக, என் குற் செய்யத்தக்கதாயிற் செய்வேன் என்ருர் பரவையார், நம்பியாரூரர் இங்கு வருவதற்கு நீ இசைதல் வேண்டும்’ என மறையவர் பணித்தருளினர். அதுகேட்ட பாவையார், * பங்குனித்திருநாளுக்குப் பொன்முதலியன கொண்டு பண்டுபோல் வருபவராக இங்கு என்னேப் பிரிந்து சென்று திருவொற்றியூரெய்தி அங்கே சங்கிலியாற் பிணிப்புண்டவர்க்கு இங்கு ஒருசார்பும் உண்டாகுமோ? அவர் பொருட்டு நள்ளிரவிலே தாங்கள் இங்கு வந்து சொன்ன காரியம் மிக வு ம் நன்ரு யிருக்கிறது’ என மறுத்துரைத் தார். நங்கையே, நீ நம்பியாரூரன் செய்த குற்றத்தினே யுளத்திற்கொள்ளாது வெகுளி நீங்கி அவனே அன்புடன் வரவேற்கும் பொருட்டன் ருே யான் உன்னே வேண்டிக்கொண்டது. இதனே மறுத் துரைப்பது முறையாகாது’ என மறையவர் வற்புறுத் திக் கூறினர். அவர் கூறியவற்றைக்கேட்ட பரவை யார், ‘அருமறை முனிவராகிய நீர் பொருத்த மில்லாத இக்காரியத்தின் பொருட்டு நள்ளிரவிலே இங்குவருதல் நுமது பெருமைக்கு ஏற்றதன்று. ஒற்றி யூரில் நிலேத்த வுள்ளமுடைய அவர் இங்கு வருவதற்கு ஒரு சிறிதும் இசையமாட்டேன். நீர் விரைவில் இவ்விடத்தைவிட்டு அகல்விராக’ எனச் சினந் தோன்றக் கூறினர். அந்நிலையில் மறையவராகவந்த இறைவர் தம்முளத்துள்ளே நகைத்துக்கொண்டு தமது உண்மையுருவம் பரவையாருக்குப் புலப்படாமல் மறைத்துத் தம் தோழரது வருத்த நிலேயைக் கண்டு மகிழும் வேட்கையினதாய்ப் பரவையார் முதலில் மறுத் து ைரத்ததையே முடிவாகக் கொண்டு சுந்தரர் பால் திரும்பிச்சென்ருர்,

தம்பொருட்டுத் துதுசென்ற இறைவரை வழி யிடையே யெதிர்பார்த்து நின்ற சுந்தரர், இறைவரை