பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 333

யினே யெடுத்துக்கூறினர்; இறைவர் வந்துசென்ற மனே வாயிலே நோக்கியவண்ணம் துயிலின்றியிருந்தார்.

அப்பொழுது சிவபெருமான், தன்னே யாவரும் உணர்ந்து கொள்ளுதற்குரிய உண்மைத திருக்கோலத் துடன் தேவர் முனிவர் சித்தர் முதலானுேர் சூழ்ந்து போற்றப் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினர். அத்தெய்வக் காட்சியைக் கண்ட பரவையார், விரைந்து எதிர்சென்று சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். சிவபெருமான், பரவையாரை நோக்கி நங்கையே தோழனுகிய சுந்தரன் நட்புரிமை யால் நம்மை ஏவ மீளவும் உன்பால் வந்தோம். நீ முன்பு போல் மறுத்துரையாது நின்பிரிவால் வருத்த முறும் சுந்தரன் நின்னே யடைதற்கு இசைதல் வேண்டும் எனப் பணித்தருளினுர். அவ்வருள் மொழி யைச் செவிமடுத்த பரவையார், இவ்வாறு முழுமுதற் கடவுளாகிய ஆரூர்ப்பெருமான அலேக்கழித்தேனே யென மணங்கலங்கிக் கண்ணிர் மல்கி, ‘அடியேன் செய்த தவப்புயல்ை அருமறை முனிவராக முன்பு வந்தவரும் நீர் தாமோ? இங்ஙனம் நள்ளிருளிலே ஒளிவளச்செய்ய பாதம் தரையிற்ப்ட்டு வருந்த அன் பர்க்காக இங்கும் அங்கும் உழல்வீராகி எளிவந்தருளி னிராயின், சிறியேன் இதற்கு உடன்படாமல் வேறு என் செய்வேன்' எனத் தம் இசைவு தோன்றக் கூறி ஆயிறைஞ் சிர்ை. -

பரவையாரது பணிமொழியினேக் கேட்டு மகிழ்ந்த இறைவர், நங்கையே, நீ நின் பெருந்தன்மைக்கேற்ப நன்றே மொழிந்தனே' எனக்கூறி விரைந்து சென்று சுந்தரரை யடைந்தார். தம்பிரான்தோழராகிய நம்பி யாரூரர் சிவபெருமானே யெதிர்கொண்டு போற்றி எம் பெருமானே, என்னுயிரைக்காவாது இடர் செய்யும் பரவையிடத்திலிருந்து எத்தகைய மறுமொழியினே க் கொண்டு வந்தீர் எனக்கேட்டார். இறைவரும் வன் ருெண்டரை நோக்கி நின்மேல் பரவை கொண்ட கோபத்தைத் தணிவித்து வந்தோம்; இனி நீ