பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 34?

முன்பு வீழ்ந்திறைஞ்சிக் கண்களில் அன்புநீர் பொழி யத் திருமும்மணிக் கோவையென்னும் சொல்மால்ே புனேந்து போற்றினர். தாம் பாடிய செந்தமிழ்ப் பனு: வலைத் தம் தோழராகியசுேந்தரர் முன்னிலையில் நலம் விவங்கக் கேட்பித்தார். கிருவாரூர்த் திருமூலட்டா னத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான், சேரவேந்தர் பாடிய தெய்வத்தமிழ்ப் பனுவலே விரும்பி யேற்றுக் கொண்டருளினர்.

நம்பியாரூரர் , தம் அன்பிற்கினிய தோழராகிய சேரமான் பெருமாளே அழைத்துக்கொண்டு பரவை யாரது திருமாளிகைக்குச் சென்ருர். அப்பொழுது பரவையார், திருவிளக்கு நிறைகுடம் முதலிய மங்கலப் பொருள்களுடன் சேரமான் பெருமாளே வணங்கி வரவேற்று சிவனடியார் களுக்கும் உடன் வந்த பரிசனங்களுக்கும் த க் க வ ைக ய ல் அறுசுவைப் போனகம் அமைத்து அன்புடன் விருந்தளித்து உபசரித்தார். அடியார்கள் மகிழ ஆளுடைய நம்பியும் சேரமான் பெருமாளும் உடனிருந்து திருவமுது செய் தார்கள். சொல் வித் தகராகிய அ வ் வி ரு வ ரு ம் செல்வத்திருவாரூர் .ே ம. வு ம் புற்றிடங்கொண்ட பெருமானேப் போற்றி வீதிவிடங்கப் பெருமானது திருவோலக்கச் சிறப்பினைக் கண்டு மகிழ்ந்திருந் தார்கள்.

இங்ங்னம் திருவாரூரில் தங்கியிருக்கும் நாளில் நம்பிய ரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களே வழிபடவேண்டுமென்னும் பெருவேட்கையுடையராய்த் தமது விடுப்பத்தினேச் சேரமான் பெருமாளுக்குத் தெரிவித்தார். தம்பிரான், தோழரைப் பிரியாத பெருங்கேண்மையினராய சேர மன்னரும் தமக்கு மதிமலி புரிசை’த் திருமுகம் அனுப்பி யருளிய திருவாலவா யிறைவரைக்கண்டு வழிபட வேண்டுமென்னும் பேரார்வமுடைய சாய்ச் சுந்தத