பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 347

வீசிக்கொண்டு தம்முடைய அரண்மனைக்கு அழைத்துச் சென் ருர், பட்டத்து யானையினின்றும் இறங்கிய நம்பியாரூரரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று அரியணையில் அமரச்செய்து தம் தேவிமார்கள் பொற் குடத்தில் நன்னீர் ஏந்திப் பணிசெய்ய வன்ருெண்டர் திருவடிகளே விளக்கி நறுமலர்தூவி அருச்சித்தார். உடனிருந்து திருவமுது செய்வித்து உபசரித்தார். இங்ங் னம் பலநாட்கள் சுந்தரரைத் தம் தலே நகரில் அமர்த்திய சேரமான் பெருமாள், செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருவிழாவும் பாடல் ஆடல் இன் னியங்கள் முதலாகப் பலவகை மகிழ்ச்சிச் செயல் களும் நிகழச்செய்து தம் தோழராகிய அவரை மகிழ் வித்து அவருடன் அளவளாவி மகிழ்ந்தார்.

சேரமான் பால் விடைபெற்றுத் திருவாரூர்க்குத் திரும்புதல் இங்ங்னம் சேரவேந்தரும் சுந்தரரும் அன்பினல் அளவளாவி மகிழ்ந்திருக்கும் நாட்களில் திருவாரூர்ப் பெருமானைக் கண்டிறைஞ்சி யின்புறவேண்டுமென்ற எண்ணம் சுந்தரர்க்கு உண்டாயிற்று. அந் நினைவு மீது ரப்பெற்ற சுந்தரர்,

பொன்னு மெய்ப் பொருளுந் தருவானேப்

போகமுந் திருவும் புணர்ப்பாசீனப் பின்ன யென்பிழையைப் பொறுப்பான

பிழையெலாந்தவிரப் பணிப்பானே இன்ன தன்மைய னென்றறியொண்ணு

எம்மானே எளிவந்தபிரானே அன்னம் வைகும் வயற்பழனத்தணி யாருரானே மறக்கலுமாமே

என வரும் திருப்பதிகத்தினேப்பாடித் தமது ஆற்றமை யினைச் சேரமானுக்குணர்த்தி விடைபெற முயன் ருர் . தோழராகிய சுந்தரரது உள்ளக் குறிப்பினேயுணர்ந்த