பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 355

சிவபெருமானது அருளாணேயினச் சிறமேற் கொண்டு வெள்ளே யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலையடைந்த தேவர்கள், அஞ்சைக் களத்தப்பனே வழிபட்டுக் கோயில் வாயிலேயடைந்த நம்பியாரூரரைக் கண்டு வணங்கி நின்று தாங்கள் இவ்வெள்ளே யானே யின் மீதமர்ந்து திருக்கயிலேக்கு உடனே வருதல் வேண்டுமென்பது சிவபெருமானது அருளிப்பாடாகும். தாங்கள் ஏவியவற்றைச் செய்ய நாங்கள் காத்திருக்கின்ருேம் என விண்ணப்பஞ் செய்தார்கள். இறைவனது திருவருளே யெண்ணிச் செய்வதொன்றும் அறியாது தம்மை மறந்த வன் ருெண்டர், ஈசனது அருளானயை விரைந்து ஏற்றுக் கொண்டார். தேவர்கள் அவரை வலம்வந்து வணங்கி வெள்ளே யானே யின்மீது அமர்த்தினர்கள். அண்டர் கள் போற்ற வெள்ளானையில் ஏறிய வன்ருெண்டர். தம்முடைய உயிர் த் தோழரும் மன்னுயிர்கள் கூறும் மாற்றங்களேயெல்லாம் உள்ளவாறு உய்த்துனரவல்ல திரு வருட் செல்வருமாகிய சேரமான் பெருமாளேக் தம்மனத்திற் சிந்தித்துக்கொண்டு கயிலேக்குப் புறப் பட்டுச் செல்வாராயினர்.

தம் உயிர்த்தோழராகிய சுந்தரர் தம்மை நினைத் துச்செல்லும் பேரன் பின் திறத்தைத் திருவருளாற்ற லால் விரைந்துணர்ந்த சேரமான் பெருமாள், தம் அருகே நின்ற குதிரையின்மீதேறித் திருவஞ்சைக் களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென் ருர் ; வெள்ளே யானேயின் மீதமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரராகிய தம் தோழரைக்கண்டார். தமது குதிரையின் செவி யிலே திருவைந்தெழுத்தினை உபதேசித்தார். அவ் வளவில் அக்கு திரை வான்வழியே செல்லும் ஆற்றல் பெற்றுத் தெய்வத்தன்மை வாய்ந்த வெள்ளே யானேயை வலம்வந்து அதற்கு முன்னே செல்வ தாயிற்று. அப்பொழுது சேரமான் பெருமானத் தொடர்ந்து பின்சென்ற படைவீரர்கள் குதிரை மீது செல்லும் அரசரைத் தம் கண்ணுக்குப் புலப்படும்