பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3 6 Í

எனவரும் இப்பதிகத் திருக்கடைக் காப்பினல் நன்கு வலியுறுதல் காணலாம். இவ்வாறே சேரமான் பெருமாள் நாயனுர் கயிலையில் இறைவன் திருமுன் கனர் அரங்கேற்றிய திருக்கயி லாய ஞான வுலாவை உடனிருந்து கேட்ட மாசாத்தனர், அத்தெய்வப் பனுவலே யுளத்துட்கொண்டு சோழ நாட்டிலுள்ள திருப்பிடவூரிலே வெளிப்படச் சொல்லித் தமிழகத் திலே வழங்கச்செய்தனர் எனச் சேக்கிழாரடிகள் வெள்ளானேச் சருக்கத்திலே குறிப்பிட்டுள்ளமை இவண் நினேக்கத்தகுவதாகும்.

சிவபெருமான் அ னு ப் பி ய வெள்ளானேயின் மீதமர்ந்து திருவஞ்சைக் களத்திலிருந்து கயிலேக்குப் புறப்பட்ட சுந்தரர். தம் அன்புடைத் தோழராகிய சேரமான் பெருமாளேச் சிந்தையில் நினைத்துக் கொண்டு சென்ரு ராக, அதனைத் திருவருளாலறிந்த சேரமான்பெருமாள் நாயனுர், தம்முடைய குதிரைக் குத் திருவைந்தெழுத்தினை யுபதேசித்து விசும்பின் வழியே செலுத்திச் சுந்தரர் ஏறிச்செல்லும் வெள்ளா னேக்கு முன்பாகக் கயிலாய மலேயை யடைந்தனர் என்பது,

சேதற்குத் தென்கு வலர் பெருமாற்குச் சிவனளித்த வீரக் கடகரி முன்புதம் பந்தி யிவுளிவைத்த வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனே வெற்றிகொண்ட சூரற் கென துள்ளம் நன்குசெய்தாய் இன்று தொண்டு

பட்டே.

என வரும் நம்பியாண்டார் தம்பி வாய்மொழியாலும், சுந்தரர் ஏறிச்செல்லும் வெள்ளானேக்குமுன் இவரது குதிரை செல்வதாகத் தஞ்சைப் பெரியகோயிலில் வரையப் பெற்றுள்ள இராசராசசோழன் காலத்து ஒவியத்தாலும் நன்கு தெளியப்படும்.

சேரமான் பெருமாளும் அவர் தோழராகிய நம்பி யாருரரும் தாம் இவ்வுலகில் தங்கியிருந்த மக்கள்