பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

癸

தேவார ஆகிரியர் காலம் 369

முதன் முதல் சீகாழிப்பதியையடைந்து திருஞான சம்பந்தப்பிள்ளையாரைக் கண்ட காலத்துப் பிள்ளே யார்க்கு உபநயனச் சடங்கு முடிந்ததெனப் பெரிய புராணத்திற் கூறப்பட்டுள்ளது. உபநயனம் செய்தற் குரிய பருவம் ஏழாவது வயதெனச் சண்டேசு ர நாயனர் புராணத்தில் சேக்கிழார் தெளிவாகக் கூறி யுள்ளார். எனவே திருநாவுக்கரசர் சீகாழிக்கு வந்த பொழுது திருஞானசம்பந்தப் பிள்ளேயார்க்கு ஏழாவது வயது நிரம்பி எட்டாம் வயது நடந்ததென்பது பெறப் படும்.

சீகாழியில் ஞானசம்பந்தப் பிள்ளையாருடன் அன்பினுல் அளவளாவி மகிழ்ந்த அப்பரடிகள் சம்பந்தர் பால் விடைபெற்றுச் சி வ த ல ங் க ளே வழிபடச் சென்ற பின்பு ஞானசம்பந்தர் சிலகாலம் சீகாழிப்பதியிலே தங்கியிருந்து பலவகை மிறைக் கவிகளேயும் செந்தமிழின் மூல இலக்கியமாகப் பாடிப் போற்றி இறைவனே வழிபட்டிருந்தனர். பின்பு தாமும் அடியார் குழாத்துடன் சிவதலங்களே வழிபட விரும்பிச் சோழநாட்டில் காவிரியின் வடகரை வழியாகச் சென்று மழநாடு, கொங்குநாடு ஆகியவற்றிலுள்ள எண்ணிறந்த சிவாலயங்களே இறைஞ்சிப் பாடினர். பின் சோழ நாட்டை யடைந்து காவிரியின் தென்கரையிலமைந்த திருக்கோயில்களே இறைஞ்சிப்பாடித் திரு.செங்காட்டங் குடியை யடைந்தார். அப்பதியிலே பரஞ்சோதியா ராகிய சிறுத்தொண்ட நாயனரால் உபசரிக்கப்பெற்றுக் கணபதிச்சரமென்னும் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் இறைவனே இன்னிசைச் செந்தமிழாற் பாடிப் போற்றினர் னப் பெரிய புராணம் கூறுகின்றது. திருச்செங்காட்டங்குடித் திருப்பதிகத்தில் செங் காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய’ எ ன வு ம் 'கன்னவில்தோட் சிறுத்தொண்டன்”, சிட்டன் சீர்ச்சிறுத்தொண்டன்' செருவடிதோட் சிறுத்