பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

பன்னிரு திருமுறை வரலாறு


நூற்ருண்டின் பிற்பகுதியும் எட்டாம் நூற்றண்டின் தொடக்கமுமாமெனக் கொள்வது பெரிதும் பொருத்த முடையதாகும். இம்முடிபினே வலியுறுத்தற்குரிய சான் றுகள் சில சுந்தரர் பாடிய திருப்பதிகங்களிற் காணப் படுகின்றன.

சுந்தரர், தம் காலத்தில் தமிழகத்திலே பெருவேந் தகைவும் சிறந்த சிவனடியாராகவும் திகழ்ந்த வேந்தர் பெருமாஞெருவனேக் கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” எனத் தாம் பாடிய திருத் தொண்டத் தொகையில் குறித்துப் போற்றியுள்ளார். இத்தொடரில் அமைந்துள்ள 'காக்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்சமானது, இங்ங்னங் குறிக்கப் பட்ட காடவர்கோனகிய கழற்சிங்கன் சுந்தரர் காலத் தில் வாழ்ந்தவன் என்பதை நன்கு தெளிவிப்பதாகும். காடவர் என்பது பல்லவர் மரபினரைக் குறித்து வழங்கும் பெயர்களுள் ஒன்று. எனவே இங்குக் கழற் சிங்கன் எனப் போற்றப்பட்ட வேந்தர் பெருமான் பல்லவர் குலத் தோன்றலென்பதும் இனிது புலனும், திருத்தொண்டத் தொகையடியார்களுள் ஒருவராக இக் கழற் சிங்கன் போற்றி வழிபடப்பெற்றிருத்தலேக் கூர்ந்து நோக்குங்கால் இவ்வரசர் பெருமான் சிறந்த சிவபத்தனென்பது நன்கு தெளியப்படும். இப்பெருத் தகைக்கு வழங்கும் கழற்சிங்கன் என்ற பெயரில் உள்ள கழல் என்பது இவரது வெற்றித்திறத்தை விளக்கு தற். கியைந்த அடைமொழியாகும். ஆகவே சிங்கன் என் பதே இவரது இயற்பெயராகச் சுந்த ராற் குறிக்கப்பட்ட தெனக் கொள்ளுதல் வேண்டும். நரசிங்கன் என்ற பெயரைச் சிங்கன் என வழங்கும் மரபுண்மை சிங்கப் பிரான் சிங்கப்பெருமாள் என்ற பெயர் வழக்கத்தால் நன்குணரலாம். எனவே திருத்தொண்டத் தொகையில் கழற்சிங்கன் எனக் குறிக்கப்பெற்ற பல்லவ வேந்தன்