பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 387

இருநூற்றுத்தொண்ணுாற்றென்பதாமாண்டு மிதுனத் தில் வியாழன் நின்ற ஆண்டு ' எனவும் வரும் கல்வெட்டுத் தொடர்களாலும் இச்செய்தி வலியுறுதல் காணலாம். கி. பி. 822-ல் நிகழ்ந்த கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்துவிட்டதென்றும் கி. பி. 825-ல் புதிய கொல்லம் அமைக்கப்பெற்றதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். எனவே கி. பி. 825.இல் புதிய கொல்லம் அமைக்கப்பெற்றுக் குடியேறிய காலம் முதற்கொண்டே கொல்லம் ஆண்டு தொடங்கி யெண் னப்பட்டு வருகிறதென்பது தெளியப்படுதலின், சேர மான்பெருமாள் தமது ஆட்சியைத் துறந்து சென்ற ஆண்டாகக் கொல்லம் ஆண்டினேக் கொள்ளுதற்குச் சிறிதும் இடமில்லை யென்க. சேரமான் பெருமாள் மக்காவுக்குச் சென்ருர் என உண்மையுணராதார் சிலர் தவருகப் பேசி வரும் கதை வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதென்பதனே எல்லோரும் ஒப்புக்கொள்வர். அங்ங்னமாகவும் அக் கதைசொல்வாரது கூற்றினே ஆதரவாகக் கொண்டு சேரமான் பெருமாள் காலத்தைத் துணிய முற்படுதல் பொருத்தமற்றதாகும். கொல்லம் ஆண்டு தொடங்குதற்குச் சிறிதேறக்குறைய நூற்று இருபதாண்டுகளுக்கு முன்பே சேரமான் பெருமாள் தமது ஆட்சியைத் துறந்து திருக்கயிலேக்குச் சென் றிருத்தல் வேண்டுமெனக் கருதுதலே பொருத்த முடையதாகும். '

3. சுந்தரர் பாடியருளிய தில்லைத்திருப்பதிகத்தில் 'கருமையாற் றருமர்ை தமர் நம்மைக் கட்டியகட்டறுப்பிப் பானே அருமையாந் தன்னுலகந் தருவானே மண்ணுலகங் காவல் பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக் கஞ்செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானேப் பெற்ற மன்றே:

2. திருவாங்கூர்க் கல்வெட்டுத் தொகுதி III, 57, 58,

1. செந்தமிழ் 44-ம் தொகுதி பக்கம் 38