பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

பன்னிரு திருமுறை வரலாறு


தரசி ரங்கபதாகை யென்பவள் காஞ்சியிற் கயிலாச நாதர் கோயிலிலுள்ள சிறு கோயில்களுள் ஒன்றைக் கட்டியிருக்கின்ருள். இதனுல் அவள் சிறந்த சைவப் பற்றுடையவளென்பது நன்கு தெளியப்படும். ஆகவே திருவாரூர்க் கோயிலில் இறைவனுக்குரிய மலரை யெடுத்து மோந்தவள் இராசசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகையாக இருத்தல் இயலாது. மூன்ரும் நந்திவர் மனுடைய பட்டத்தரசியாகிய சங்கா என்ப வள் இரட்டப் பேரரசனும் சமண சமயத்தவனுமாகிய அமோக வர் ஷ நிருபதுங்கனுடைய மகளாவாள் அவளே மன்னனுடன் திருவாரூர்க் கோயிலுக்குச் சென்று அங்குள்ள சிற்பவளங் கண்டு வரும்பொழுது பூமண்டபத்தின் அருகிலுள்ள மலரையெடுத்து மோந்த வளாதல் வேண்டும் என் பாருமுளர்."

கழற்சிங்கனுகிய வேந்தர்பெருமான் திருவாரூ ருக்குச் சென்று இறைவரை வழிபட்டபொழுது அவனு டைய பட்டத்தரசியும் அவ் வழிபாட்டிற் கலந்து கொண்டு திருக்கோயிலே வலம் வந்தாளெனவும் அவள் பூத்தொடுக்கும் மண்டபத்தருகே வந்தபொழுது இறைவனுக்கணிதற்கியலாதபடி தூய்மை யிழந்த நிலையிற் கீழே கிடந்த புதுமலரொன்றை யெடுத்து மோந்தாளெனவும் அதனேக்கண்டு பொருத செருத் துணையார் என்னும் அடியவர் அவளது மூக்கினே யறுத்த நிலையில் அங்கு வந்த வேந்தன், தன் மனைவி செய்த செயல் குற்றமென்பதனே ஒப்புக்கொண்டு அக் குற்றம் புரிதற்குத் துணையாயிருந்த அவளுடைய கையையும் வெட்டிெைனனவும் பெரிய புராணம் கூறும். இச் செய்தி இவ் வேந்தர் பெருமானது சிவ பத்தியின் மாண்பினைப் புலப்படுத்துவதன்றி இவ இணுடைய பட்டத்தரசி சமண சமய த்தவள் என்பதை உணர்த்துவதன்ரும். இவ்வரலாற்றிலிருந்து கழற் சிங்கன் பட்டத்தரசியைச் சைவ சமயத்தவள் அல்லள் என்று துணிதற்குரிய குறிப்பெதுவும் இல்லையென்பதும்

1. பெரியபுராண ஆராய்ச்சி, பக். 54-56.