பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

பன்னிரு திருமுறை வரலாறு


புரிந்த பல்லவனைச் சுந்த சர் கழற்சிங்கன் என்ற பெய ரால் தெளிவாகக் கூறியிருக்கவும் அப்பெயரால் வழங் கப்படாத தெள்ளாறெறிந்த நந்திவர் மனேக் கழற்சிங்க னெனக் கொள்ளுதல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க.

5. சுந்தரர் வட திருமுல்லேவாயிற் பதிகத்திற் குறிப்பிட்ட தொண்டைமான் களிற்றை முல்லேக் கொடியாற் கட்டிய செய்தி, இரண்டாம் நந்தி வர்ம னது பட்டவர்த்தனம் என்னும் மதம் பிடித்த யானேயைப் பற்றியதாக லாம் எ ன்பர் சிலர்."

இங்ங்னம் எண்ணுதற்கு எவ்விதத் தொடர்பு மில்லே யென்பது அத்திருப்பாடலே ஊன்றிப் பயில் வார்க்கு நன்கு புலனம். அப்பாடலிற் குறிக்கப்பட்ட தொண்டைமானென்பவன், காஞ்சியைப் பல்லவர்கள் கைப்பற்றுதற்கு முன்பு தொண்டை நாட்டை ஆட்சி புரிந்த தமிழ்வேந்தவைான். அவனுக்குத் திருமுல்லே வாயிற் பெருமான் அருள்புரிந்த பழைய வரலாற்றையே சுந்தரர் தம் பாடலிற் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார் பல்லவர் குடியினரைத் தொண்டைமான் என வழங் கும் வழக்கம் தேவார ஆசிரியர் காலத்திற்குப் பிற்பட்ட தாகும். ஆகவே சுந்தரர் இரண்டாம் நந்திவர்மனே த் தொண்டைமான் என்ற பெயரால் தம் பாடலில் குறிப்பிட்டாரென்னும் இக்கூற்று உண்மையன்றென்க:

6. சுந்தரரை இராசசிங்கன் காலத்தவராகக் கொள்ளுதற்கு அப்பர்க்கும் இராசசிங்கனுக்கும் உள்ள குறுகிய கால இடையீடும், இராசசிங்களு ற் கட்டப் பெற்ற காஞ்சிக் கயிலாய நாதர் கோயிலேச் சுந்தரர் பாடாமையும் தடைகளாமென்பர் சிலர்."

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இறை வன் திருவடிகளிற் கலந்த சில ஆண்டுகளுக் குள்ளேயே சுந்தரர் தமிழகத்தே பிறந்தருளினரெனத்

1. பெரிய புராண ஆராய்ச்சி பக் 58. 2. 6ു. 6:ു. பக் 59.