பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

பன்னிரு திருமுறை வரலாறு


யாளர் துப்ரே அவர்களது கருத்தாகும். இப்பாண்டி யன் கி. பி. 670 முதல் 710 வரை ஆட்சிபுரிந்தவன். இவன் காலத்திலே தான் கந்தர மூர்த்திசுவாமிகள் சேர மான் பெருமாள் நாயனருடன் மதுரைக்குச் சென்று இவலுைம் இவன் மகளே மணந்து மதுரையில் தங்கி யிருந்த சோழமன்னஞலும் உபசரிக்கப் பெற்றுத் திரு வாலவாய்ப் பெருமானேயும் திருப்பரங்குன்றப் பெரு மானேயும் வழிபட்டுப் போற்றின சென்பது ஆராய்ச்சி யாளர் கருத்தாகும். இம்முடிபினே இயைத்து நோக்கு மிடத்துச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்ந்தகாலம், பல் லவர், பாண்டியர், சோழர், சேரர் என்னும் தமிழ்நாட்டு வேந்தர்கள் அனைவரும் சைவசமயத்தைப் போற்றி வளர்த்த அமைதியான காலமென்பதும் இக்காலப் பகுதியில் தமிழகத்தை யாண்ட வேந்தர்களிடையே சிறுகச் சிறுக ஒற்றுமை நிலவத் தொடங்கிய தென்ப தும் ஒருவாறு புலனுகும். சீன தேச யாத்திரிகரொரு வர் எ ழு தி யு ள் ள யாத்திரைக்குறிப்பில் தமிழ் நாட்டில் இராசசிம்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இச் செய்தி,

' வையக முற்று மாமழை மறந்து

வயலில் நீரிலே மாநிலம் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்கனே யென்ன

ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரத் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் உருளுஞ் செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொழிற்றிருப் புன்கூ ருசானே.” எனவரும் சுந்தரர் தேவாரத்தாலும்,

பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர் புயல்மறந்த கன்னன் மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்

8. பாண்டியர் வரலாறு பக். 68

፥፥ 46