பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பன்னிரு திருமுறை வரலாறு


பதிகங்களையும் நாள்தோறும் பாடுவதற்கு நிவந் தங்கள் அளிக்கப்பெற்றுள்ளன. இவ்வுண்மையை அவர்களுடைய ஆட்சியிற் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் நன்கறியலாம். முதல் ஆதித்த சோழட்ைசியில் கி. பி. 873-ல் திரு எறும்பியூரிலும் கி.பி. 876-ல் பழுவூரிலும் முதற்பராந்தக சோழட்ைசி யில் கி.பி. 910-ல் திருவாவடுதுறையிலும், கி. பி. 911-ல் அல்லூரிலும், கி பி. 944-ல் திருத் தவத்துறை யிலும், உத்தமசோழனுட்சியில் கி. பி. 977-ல் கோனேரிராசபுரம் எ ன் னு ம் திருநல்லத்திலும் கி. பி. 984-ல் அந்துவநல்லூரிலும் திருப்பதிகங்கள் பாடுவதற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை யெல்லாம் முதல் இராசராச சோழட்ைசிக்கு முன்னர் நிகழ்ந்தவையாகும். எனவே அம் மன்னனது ஆட்சிக் காலத்திற்குப் பல ஆண்டுகட்கு முன்பே சமயகுரவர் மூவருடைய திருப்பதிகங்களும் கோயில்களிற் பாடப் பெற்று வழக்கிலிருந்து வந்தன என்பது வெளிப்படை ஆகவே நம்பியாண்டார் நம்பியின் துணைகொண்டு திருமுறை கண்டவன் முதலாம் இராசராச சோழன் என்று கூறுவது ஏற்புடைத்தன்ரும்.

இதுகாறும் ஆராய்ந்தவாற்ருல் நம்பியாண்டார் நம்பி முதல் இராசராச சோழன் காலத்தில் இருந்த வ ரல்லரென்பதும், முதல் ஆதித்த சோழன் ஆட்சிக் காலத்திலும் அவன் புதல்வன் முதற் பராந்தக சோழ ட்ைசியின் முற்பகுதியிலும் இருந்தவரா வரென்பதும் நன்கு விளங்குதல் காண்க. எனவே இப்புலவர் பெரு மான் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியிலும் பத் தாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் நம் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சிப் பேரறிஞர் திருவாளர்

Tos. 29 Of 94. 2. ns. Z49 Of 98. 3. Ins. i39 of 1925. 4, S. I, I. VoL. VIIf, No. 687. 5. Hns. 99 of 1929, 6. S. I. I. VoL. III, No. 151 A

1. Ibid No. 139.