பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 403

குரிய திருப்பதிகங்களே முதலிடம் பெற்றிருக்கல் காணலாம். மருதப் பெரும்பண்ணின் வேடுகு" என்னுந் திறத்தின் அகநிலையாகிய இந்தளப்பண், இத் திரு முறையின் முதற்கண் இடம்பெற்றிருத்தல நோக்குச் கால், தெய்வப்பாடல்களுக்குச் சிறப்புரிமையுடைய பண்களுள் இந்தளமும் ஒன்றென்பது நன்கு புலகும். காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டனுள் முதற்பதிகத்திற் குரிய நட்டபாடைப்பண் தேவாரத்தில் முதல் திரு முறையில் முதற் பண்ணுக அமைந்திருத்தல் போலவே அம்மையார் அருளிய எட்டியிலவம்’ என்னும் இரண்டாந் திருப்பதிகத்திற்குரிய இந்தளப்பண் இசி விரண்டாந் திருமுறையின் முதற் பண்கை அமைந் திருத்தல் அறியத்தக்கதாகும்.

பாலநெய்தல் பாடிய காரைகள் கூகைமுல்லை’ என வரும் திருநனிபள்ளித் திருப்பதிகமும், திருநெல் வாயில் அரத்துறையீசர் தந்தருளிய முத்துச் சிவிகை, குடை, சின்னம் முதலியவற்றைப் பெற்ற பிள்ளே யார், இறைவனது திருவருளே வியந்து போற்றிய 'எந்தை யீசன்’ என்னும் தி ரு ப் ப தி க மு ம் , திருமருகல் என்னும் தலத்தில் அரவுதீண்டியிறந்த வணிகைெரு வனே உயிர் பெற்றெழச் செய்தல் வேண்டி ஆளுடைய பிள்ளையார் பாடியருளிய சடையாயெனுமால்' என்னும் விடந்தீர்த்த பதிகமும், திருமறைக்காட்டில் திருக் கதவம் அடைக்கப் பாடிய சதுரம் மறை என்ற பதிக மும், திருமறைக் காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்பட்ட பொழுது, "நாளும் கோளும் தீயன ஆதலால் எழுத் தருள ஒண்ணுது’ என விலக்கிய தம் கெழுதகை நண்பர் அப்பர்டிகளுக்கு அமைதி கூறி அவரது இசைவு பெறும் கருத்துடன் பாடிய வேயுறு தோளி பங்கன்’ எனவரும் கோளறு திருப்பதிகமும், மதுரையிற் கூன்.பாண்டியனது வெப்புநோய் நீங்கப்பாடிய மந்திர