பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 4 #9

பாடிப் பரவுதற்கேற்ற சந்தமாக இத்திருக் குறுந் தொகை யாப்பு அமைந்திருத்தல் காணலாம்.

தனக்குவமையில்லாத தலேவகிைய முழுமுதற் பொருளின் எண்ணிறந்த அருட்குணங்களெல்லாவற். றையும் அப்பெருமான் திருமுன்னரும் தம்முன் உள்ள அன்பர்களுக்கும் பிறர்க்கும்.தமது நெஞ்சத்திற்கும்விரித் துரைத் தற்கேற்ற யாப்பமைதி பெற்று விளங்குவன திருத்தாண்டகத் திருப்பதிகங்களாகும். தாண் டகம் என்பது, தொல்காப்பியச் செய்யுளியலின் படி எண் சீரான் வந்த கொச்சக வொருபோகு எனக்கூறப்படும். அடிதோறும் நான் காஞ்சீரும் எட்டாஞ்சீரும் தேமா வாக நிற்ப, மூன்ருஞ்சீரும் ஏழாஞ்சீரும் பெரும்பான்மை தேமாகவும் ஒரோ வழிப் புளிமாகாவும் அமைய, இவை யொழிந்த ஒன்று, இரண்டு ஐந்து, ஆருஞ்சீர்கள் பெரும்பாலும் காய்ச்சீர்களாகவும், சிறுபான்மை மாச்சீர் விளச்சீர்களாகவும் வருதல் தாண்டகம் என்னும் பாவின் இயல்பாகும்.

எண் சீரான் வந்த இத் தாண்டகப்பாவில், அடி தோறும் மூன்று, நான்கு ஏழு, எட்டாம் சீர்களே விலக்கிவிட்டு ஏனைய நான்கு சீர்களேயும் இணைத்து நோக்கினுல் அப்பாடல் கொச்சகக் கலிப்பா என்னும் யாப்புருவில் அமைதலைக் காணலாம். '

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று

வலிசெய்து வளே கவர்ந்தார் வந்து நம்மைக் கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்

கடியதோர் விடையேறிக் காபா லியார் சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்

தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற அண்ணலார் போகின்ருர் வந்து காணிர்

அழகியரே ஆமாத்துார் ஐயனரே.

1. யாழ் நூல், பக்கம் 219.