பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 42 {

யில் தண்டகம் என்ற செய்யுளமைப்பைத் தாண்டகம் என்ற பெயராற் குறிப்பிட்டிருத்தலே எடுத்துக்காட்டுத லுங் கூடும். தேவார ஆசிரியர்கள் வாழ்ந்த காலத் திற்கு நானுாருண்டுகள் பிற்பட்டவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர். அவ்வாசிரியர் வடமொழி யிலக்கண விதிகளைத் தமிழிலும் வைத்துணர்த்த விரும்பி, 'இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத்தும் குருலகுவும் ஒத்துவரு வன அளவியற்ருண்டகம், எழுத்தொவ்வாதும் எழுத் த லகு ஒவ்வாதும் வருவன அளவழித்தாண்டகம்”. எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாசிரியரால் தாண்ட கம் என்ற பெயருடன் உதாரணமாகக் காட்டப்பட்ட தண்டகச் செய்யுட்களேயும் அவர்க்கு நெடுங்காலம் முற்பட்ட அப்பரடிகள் அருளிய திருத்தாண்டகப் பாக்களேயும் ஒப்பிட்டு நோக்குங்கால் அவை எழுத்தள வாலும் பரந்துட்ட ஒசையாகிய ‘பா’ என்னும் உறுப் பாலும் தம்முள் வேருதல் புலனும்.

திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்டக யாப்பு, ஒற்றும் குற்றியலுகரமும் நீக்கி எழுத்தெண்ணி வகுக் கப்பட்ட ஐ வ ைக யடிகளுள் கழிநெடிலடிக்கு மேலெல்லேயாகிய இருபதெழுத்தென்னும் அளவினேக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவ தாகும். யாப்பருங்கலவிருத்தியுரையில் தாண்ட கம் என்ற பெயராற் குறிக்கப்பட்ட வடமொழித் தண்டக யாப்பு இருபத்தேழெழுத்து முதலாக அவற். றின் மிக்க எழுத்துக்க ளேப் பெற்று இயல்வதாகும். தேவாரத்திலுள்ள திருத்தாண்டகப் பாடல்கள் கொச்ச கம் என்னும் தமிழ்ச் செய்யுளிலக்கணத்தினை அடி யொற்றியமைந்தனவாகும். யாப்பருங்கல விருத்தி யுரையில் உதாரணமாகக் காட்டப்பட்ட தாண்டகச்

1. யாப்பருங்கல விருத்தி, பக்கம் 447,

2. 5.x பக்கம் 454-456,