பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 429

யாப்பியல் மரபே தேவாரத் திருப்பதிகங்களுக்கு மிகவும் ஏற்புடையதென்பதும் முன்னேச் சான் ருேர் பலரது துணிபாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனுர், தொல்காப்பியச் செய்யுளியலின் கண்ணே ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா எனப்பாக்கள் நான்கென்றும், அந்நால் வகைச் செய்யுட்களும் அறம், பொருள், இன்பம் என்னும் மும்மு தற்பொருள்களையும் கருவாகக்கொண்டு பாடப்பெறுவன என்றும் கூறிஞர். நால்வகைப் பாக் களுள் ஒன்ருகிய கலிப்பாவினே ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி உறழ்கலியென நான் காகப் பகுத்து, அந்நால்வகையுள் ஒன் ருகிய ஒத்தா ழிசைக்கலியை அம்போதரங்கம் எனவும் தேவர்ப் பராயது என வும் இருவகையாக்கி, தேவர்ப்பராயதனே வண்ணகம் என வும் ஒருபோகு என வும் இரண்டாக்கி, அவ்விரண்டனுள் ஒருபோகினைக் கொச்சக ஒரு போகு எனவும் அம் போதரங்க ஒருபோகு எனவும் இருவகையாகப் பகுத்து விளக்கியுள்ளார், தொல்காப் பியச் செய்யுளியலில்,

  • தரவின் ருகித் தாழிசை பெற்றும்

தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண் ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக ஒருபோ காகும் என்ப? (செய்யுளில்-149)

எனவரும் நூற்பாவில் கொச்ச ஒருபோகின் இலக் கணம் விரித்துரைக்கப்பெற்றது. கலிப்பாவுக்கு உரிய தரவு முதலாயின உறுப்புக்களில் தரவு இன்றித்தாழிசை பெற்றும் தாழிசையின்றித் தரவு முதலாயின உடைய தாகியும், எண்ணுகிய உறுப்பின இடையிட்டுச் சின் னம் என்றதோர் உறுப்புக்குறைந்தும், அடக்கியலாகிய சுரித் கமின்றித் தரவு தானே அடி நிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக் கலிக்குரிய யாப்பினும் பெரு